Cinema News Stories Trending

‘புட்டபொம்மா’ கொடுத்த Beast Update !!!

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. அவர் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தங்களது twitter பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில், பீஸ்ட் திரைப்படத்தில் பணியாற்றியது தனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது எனவும் இப்படம் நெல்சனின் படமாகவும் தளபதி விஜயின் படமாகவும் வந்துள்ளது எனவும் பூஜா ஹெக்டே குறிப்பிட்டுள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில், இதுபோன்ற update-கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.

Image

பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை அதிகம் சிரிக்கவைக்கும் எனவும், அதில் நெல்சன் ஸ்டைல் மற்றும் விஜய் ஸ்டைல் இடம் பெற்றிருக்கும் எனவும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கி வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் பீஸ்ட்  திரைப்படத்திலும் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

“பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது, ஏதோ ஒரு சுற்றுலா பயணத்தில் இருந்தது போல நான் உணர்ந்தேன்”, என பூஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். “இந்த திரைப்படத்திற்கான எனது காட்சிகளின் shoot இன்றுடன் நிறைவடைகிறது. இதுதான் கடைசி நாள் என்று நினைக்கும் போது சற்று வருத்தமாக இருக்கிறது” எனவும் பூஜா தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சில நிமிடங்களில் இருந்தே தளபதி விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை ட்விட்டரில் trendஆக்கி  வருகின்றனர். சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்று பயங்கர வைரலானது குறிப்பிடத்தக்கது.

Image

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து படத்தை குறித்த அடுத்தடுத்த சுவாரசியமான update-கள் வர ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள பூஜா ஹெக்டேவின் வீடியோவை கீழே உள்ள ட்விட்டர் பதிவில் காணுங்கள்.

பீஸ்ட் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.