Cinema News Interview Stories

இந்த ரகசியத்த அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்! – பூஜா ஹெக்டே

Pooja-Hegde

சமீபத்தில் ‘ராதே ஷ்யாம்’ பட வெளியீட்டை முன்னிட்டு நடிகை பூஜா ஹெக்டே சூரியன் FM-க்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவரிடம் ராதே ஷ்யாம் படப்பிடிப்பில் நடைபெற்ற நகைச்சுவையான விஷயம் என்ன என்ற கேள்வியெழுப்பினோம்.

அதற்கு பதிலளித்த அவர் “ராதே ஷ்யாம் படப்பிடிப்பில் நிறைய நகைச்சுவையான விஷயங்கள் நடந்தது. என்னுடைய பிறந்தநாளை நான் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு தளத்தில் இத்தாலியில் கொண்டாடினேன். எனக்காக ஒரு பெரிய Tiramisu cake வாங்கி வைத்திருந்தார்கள். அந்த கேக்கில் நிறைய குட்டி குட்டி ரோஜாப்பூ டிசைன் இருந்தது. நாங்கள் ப்ரொடக்‌ஷனில் இருக்கும் அனைவரும் வந்த பின் கேக் வெட்டலாம் என காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அனைவரும் வருவதற்கு சற்று தாமதமானது.

அதற்குள் நானும் எனது உதவியாளரும் யாருக்கும் தெரியாமல் கேக்கிலிருந்து முதல் 2 ரோஜாக்களை எடுத்து சாப்பிட்டு விட்டு, கேக்கை சரிசெய்து வைத்து விட்டோம். இந்த ரகசியத்தை அவர்களிடம் சொல்ல வேண்டாம்” என்று கூறினார்.

மேலும் ராதே ஷ்யாம் படம் குறித்த சுவாரஸ்யமான பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo