சூர்யா ஒரு ஜென்டில் மேன்! – பிரியங்கா மோகன்

Priyanka-Mohan

எதற்கும் துணிந்தவன் பட வெளியீட்டை முன்னிட்டு, சமீபத்தில் நடிகை பிரியங்கா மோகன் சூரியன் FM-க்கு பேட்டியளித்தார்.

அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டோம். அப்போது நடிகர் சூர்யா உடனான அனுபவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன் “சூர்யா சார் மிகவும் வசீகரமானவர். அவருடன் பணியாற்றத் தொடங்கியவுடன் எனக்கு மரியாதை அதிகரிக்கத் தொடங்கியது. அதை என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு ஜென்டில் மேன். நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார். எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருடனான காட்சிகள் தான் அதிகம் இருக்கும்” என்று கூறினார்.

மேலும் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனிடம் பிரியங்கா மோகன் கேட்கும் ‘நீங்க தினமும் காலைல எத்தன மணிக்கு எழுந்திருப்பீங்க?’ என்ற கேள்வியையே நாங்கள் பிரியங்கா மோகனிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் “எனக்கு அதிகாலையில் எழுந்திருப்பது சுத்தமாக பிடிக்காத ஒரு விஷயம். அதிகாலையில் ஷூட்டிங் அல்லது வேறு எதாவது வேலை இருந்தால் எழுந்திருக்கலாம். இல்லையெனில் எழுந்திருக்கவே மாட்டேன். இரவு சீக்கிரமாக தூங்கி விடுவேன். ஆனால் காலையில் 10 மணிக்கு தான் எழுவேன்” என்று கூறினார்.

அதுமட்டுமின்றி மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo

About the author

MaNo