தனுஷின் ரகிட ரகிட !!!

தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் “ரகிட ரகிட” பாடல் இணையத்தில் தனுஷின் பிறந்தநாளுக்கு என பிரத்தியேகமாக வெளியிடப்பட்டது. இப்பாடலின் லிரிக் வீடியோ வெளியான ஒரே நாளில் யூட்யூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த இப்பாடல் கேட்போரை துள்ளாட்டம் போட வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இப்பாடலுக்கு விவேக் அவர்கள் வரிகளை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் தீயுடன் இணைந்து தனுஷும் இப்பாடலை பாடியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படம் எப்பொழுது வெளியாகும் என எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே பெரிய அளவில் இருக்கிறது.

இந்நிலையில் இப்பாடல் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாய் அமைந்துள்ளது. இப்பாடல் யூடியூபில் வெளியான ஒரு நாளுக்குள் 29 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. இப்பாடலில் அமைந்த “எனக்கு ராஜாவானான் வாழுறேன், எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்” போன்ற வரிகள் தனுஷின் குரலில் ஒலிக்கும்போது அதைக் கேட்போருக்கு புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

தனுஷின் பிறந்தநாள் அன்று தனுஷ் ரசிகர்களுக்கு மாஸ் ஆன அப்டேட் ஆக இப்பாடல் அமைந்தது என்றே கூறலாம். இந்த லிரிக் விடியோ அமைக்கப்பட்டிருக்கும் விதமும் அதில் தோன்றும் தனுஷின் புகைப்படங்களும் ஜகமே தந்திரம் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இப்பாடலின் லிரிக் வீடியோவை கீழே காணுங்கள்..