Specials Stories

மொழிகளை கடந்த ஸ்ரேயா கோஷல்!

Shreya-Ghoshal

ஒருவர் தனக்கு தெரிந்த மொழியில் பேசலாம், எழுதலாம். தெரியாத ஒரு மொழியில் எதையும் செய்ய முடியாது. ஆனால் கலை என வரும் போது அதற்கு மொழி ஒரு பொருட்டே கிடையாது. சினிமாவில் ஒரு மொழி தெரியாமல் பேசலாம், எழுதலாம், பாடலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

உலகத்தின் ஏதோ ஓர் மூலையில் உருவான பாடலை நம்மில் எத்தனை பேர் மொழி தெரியாமல் வெறும் இசையால் மட்டுமே ஈர்க்கப்பட்டோ, பாடலின் காட்சியமைப்பால் ஈர்க்கப்பட்டோ பார்த்துக் கொண்டு, பாடிக் கொண்டிருக்கிறோம். மேலும் இன்றைய சமூகவலைதள வாழ்க்கை முறையில் ஒருவர் மிகப் பெரிய பிரபலமாக இருக்கும் பட்சத்திலோ, பிரபலமாகும் பட்சத்திலோ அவர் எந்த மொழியிலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

மேற்கு வங்காளத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரேயா கோஷல், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பாட்டுப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று ஒரு பாடகியாக அனைவராலும் அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு ஸ்ரேயா கோஷலுக்கு கிடைத்தது.

அந்த படத்தில் அவர் பாடிய ‘சலக் சலக்’ பாடல் அதிரி புதிரி ஹிட்டானது. இப்படியாக வெற்றியுடன் தொடங்கிய இவரது இசைப்பயணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரந்து விரிந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட அனைத்து மொழி மக்களும் அவரது குரலுக்கு அடிமையாகத் தொடங்கினர்.

மொழி தெரியாமல் பாடுவதால் வார்த்தை உச்சரிப்பில் சில பாடகர்களுக்கு சிக்கல் இருக்கும். ஆனால் சில பாடகர்கள் தெரியாத மொழியில் பாடும் போது கூட வார்த்தை உச்சரிப்புகள் மிகவும் தேர்ந்ததாய் இருக்கும். தெரியாத மொழியிலும் அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளை உச்சரிப்பதே ஸ்ரேயா கோஷலின் மிகப்பெரிய வெற்றிக்கான காரணம். சில ஆண்டுகளில் பல விருதுகளை வாங்கிக் குவித்தார். இந்தியாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அனைவருடனும் பணியாற்றினார்.

தமிழ் மொழியில் ஸ்ரேயா கோஷலின் குரலில் உருவான பாடல்கள் சிலவற்றை தற்போது பார்ப்போம்.

  1. முன்பே வா
  2. இளங்காத்து வீசுதே
  3. நினைத்து நினைத்து பார்த்தால்
  4. இறக்கை முளைத்தேன்
  5. பற பற பறவை ஒன்று
  6. ஒரு கிளி ஒரு கிளி
  7. மயிலாஞ்சி
  8. சொல் பேச்சு கேக்காத சுந்தரியே
  9. அம்மாடி அம்மாடி
  10. சஹாயனே
  11. அன்பே பேரன்பே
  12. சொல்லிட்டாலே அவ காதல
  13. மன்னிப்பாயா
  14. போன உசுரு வந்துருச்சு
  15. பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

இப்படி தெரியாத ஒரு மொழியில் கிராமப்புறம் சார்ந்த பாடல், நகர்ப்புறம் சார்ந்த பாடல் இப்படி எந்த விதமான பாடலையும் மனதில் நிலை நிறுத்தும் வகையில் பாடியுள்ளார். தமிழில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்கள் அனைத்தும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவை. இன்னும் பல தமிழ்ப் பாடல்கள் ஸ்ரேயா கோஷல் குரலில் ஒலிக்கும்.

Article By MaNo