Specials Stories

‘ஸ்ருதி’ஹாசன் இல்லாத இசையா?!

Shruthi

ஸ்ருதி இல்லாத இசையை கேட்க முடியுமா? முடியாது. இசை அப்டினாலே கண்டிப்பா அங்க ஸ்ருதி இருக்கும். இதெல்லாம் தெரிஞ்சுதான் கமல்ஹாசன் அவர் பொண்ணுக்கு ‘ஸ்ருதி’ன்னு பேர் வைச்சாரோ?! எப்படியோ இந்த விசயத்துல கமல் ஒரு தீர்க்கதரிசி தான்.

ஆரம்பத்துல நடிகர் கமல்ஹாசன் மகளா, இன்னைக்கு ஒரு நடிகையா எல்லாருக்கும் தெரிஞ்ச ஸ்ருதிஹாசன் தனக்குனு ஒரு தனித்துவமான முத்திரைய பதிச்சது Music-ல தான். ஸ்ருதிஹாசனுக்கான இசைத்திறன் எங்க இருந்து வந்திருக்கும்னு பொதுவா எல்லாருக்குமே தெரியும்.

கமல்ஹாசன் இசை மேல எவ்ளோ ஈடுபாடு கொண்டவர்னு அவருடைய பட பாடல்கள், அவர் பாடின பாடல்களை கேட்டாலே தெரியும். அப்படிப்பட்டவரோட பொண்ணு ஸ்ருதிஹாசன் ரொம்ப நல்லா பாடாம இருந்தாதான் ஆச்சரியப்படணும். தமிழ்ல தன்னோட முதல் பாடல 6 வயசுல பாடி ஒரு பாடகியா அறிமுகமாகியிருக்காங்க ஸ்ருதிஹாசன். என்ன பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமால ஒரு முக்கியமான திரைப்படமா இன்னைக்கு வரைக்கும் எல்லோராலயும் பேசப்படுற ‘தேவர் மகன்’ படத்துல வரக்கூடிய முக்கியமான பாடலான ‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாட்ட சிவாஜி கணேசனோட இணைந்து பாடியிருக்காங்க. எவ்ளோ கொடுத்துவச்சவங்க பாருங்க. அங்க ஆரம்பிச்ச ஸ்ருதியோட இசைப்பயணம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்னு இப்போ இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வந்தாச்சு.

அதேபோல ஸ்ருதிஹாசனோட குரல் ஒரு தனித்துவமான குரல். எத்தனை பாடகர்களுக்கு நடுவுல பாடினாலும் அவருடைய குரல் தனியா தெரியும். இப்போ அவர் பாடின சில பாடல்கள் சொல்றேன் கேளுங்க.

  1. ஹேராம் படத்துல ‘ராம் ராம் ஹே ராம்’ பாடல்

2. வாரணம் ஆயிரம் படத்துல 90ஸ் கிட்ஸ் ரொம்ப ரசிச்ச ‘அடியே கொல்லுதே’ பாடல்

3. உன்னைப்போல் ஒருவன் ‘வானம் எல்லை’ Album song

4. ஏ.ஆர்.ரஹ்மான் இசைல ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ Album song

5. ஏழாம் அறிவு படத்துல ‘எல்லேலாமா’ பாடல்

6. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்துல ‘சொக்குப்பொடி போட்டாலே’ பாடல்

7. ‘3’ படத்துல ‘கண்ணழகா’ பாடல்

8. மான் கராத்தே படத்துல ‘உன் விழிகளில்’ பாடல்

9. ‘Shamitabh’ படத்துல ‘Stereophonic Sannata’ பாடல்

10. புலி படத்துல ‘ஏன்டி ஏன்டி’ பாடல்

இன்னும் லிஸ்ட் இருக்கு. இப்படி ஸ்ருதி பாடின எல்லா பாட்டுமே சூப்பர் ஹிட். அதுமட்டுமில்ல உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு அவர்தான் Music Composer. கமல்ஹாசன் கூட ஒரு பேட்டில, ஸ்ருதிஹாசன் இசைத்துறைல Independent Music-ல பெரிய ஆளா வரணும்னு எனக்கு ஆசைனு சொல்லியிருப்பார்.

என்ன இருந்தாலும் நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்தா தான் நமக்கு சந்தோசமா இருக்கும். அப்படி தமிழ் சினிமால 2000-ல வெளிவந்த ஹேராம் படத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி இன்னைக்கு தெலுங்கு, ஹிந்தி, கன்னடானு பல மொழிகள்லயும் முன்னணி நடிகையா வலம் வந்துட்டு இருக்காங்க ஸ்ருதிஹாசன்.

அவ்ளோ பிஸியா இருந்தாலும் அப்பப்போ நமக்காக ஸ்ருதி ஹாசன் பாடல்களும் பாடிட்டு தான் இருக்காங்க. தொடர்ந்து ஒரு நடிகையாவும், பாடகியாவும் இன்னும் நிறைய நல்ல படைப்புகள ஸ்ருதிஹாசன் தரணும்.

ஸ்ருதி ஹாசனுக்கு சூரியன் FM சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.