Stories Trending

சூரிய கிரகணம் – நெருப்பு வளையமானது

Solar Eclipse 2019
Solar Eclipse 2019

இயற்கையின் அதிசய நிகழ்வான நெருப்பு வளையமான சூரிய கிரகணம் இன்று நடைபெற்று உள்ளது. இந்திய நேரப்படி காலை 7:59:53 தொடங்கி பிற்பகல் 13:35:40 வரை நடைபெற்று வருகின்றது.

சூரிய கிரகணம்
Solar Eclipse 2019

சூரியனை 3 நிமிடங்கள் முழுமையாக மறைக்கும் நிலவு அதற்கு பிறகு சூரியனின் நடுப்பகுதியை மட்டும் மறைக்கும். இதன் காரணமாக சூரியனை சுற்றிலும் சிகப்பு நிற வட்ட வளையம் காணப்படும். .

சூரிய கிரகணம்
Solar Eclipse 2019

சூரியனை மறைக்கும் இந்த நிகழ்வானது 75 ஆண்டுகளுக்கு பிறகு தென்னிந்தியாவில் தெரிய கூடிய அரிய நெருப்பு வளைய கிரகணமாகும். இதை வெறும் கண்களால் பார்க்க கூடாது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த அதிசய நிகழ்வை உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஊடகங்களும், மக்களும் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்

Solar Eclipse
Solar Eclipse 2019

ஊட்டியில் சிவப்பு நிறத்திலும், ஒடிசாவில் ஊதா நிறத்திலும் தோன்றி உள்ளது. அடுத்ததாக  இந்நிகழ்வு தமிழகத்தில் 2031 ம் ஆண்டு மே 21 அன்று நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Solar Eclipse
Solar Eclipse 2019

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய கிரகணம் நிகழும். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களின் நடை சாத்தப்பட்டுஉள்ளது.

சூரிய கிரகணம் என்பது அமானுஷ்ய நிகழ்வாக பிரதிபலிக்கப்பட்டு அதை மையப்படுத்தி பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஜோதிகா நடிப்பில் வெளியான லிட்டில் ஜான் , பொட்டு அம்மன் மற்றும் அவள் ஆகிய தமிழ் படங்கள் எடுக்கபட்டுள்ளன. உலக அளவில் அப்போகலிப்டோ படமும் வெளியிடப்பட்டுள்ளது.

Apocalypto சூரிய கிரகணம்
Apocalypto Solar Eclipse Poster

இயற்கையின் அதிசய நிகழ்வான இந்த நெருப்பு வளைய அதிசயத்தை பல்வேறு கோளரங்கங்களிலும், பாதுகாப்பான முறையிலும் மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.