Cinema News Stories Trending

சூரரைப் போற்று செய்த Super சம்பவம் !!

சூரரைப் போற்று திரைப்படம் வெளியானதிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகளை வாங்கிக் குவித்தது. அந்த வகையில் உலகின் தலை சிறந்த படங்கள் வரிசையில் இப்படம் ஒரு முக்கிய இடம் பிடித்தது.

தற்போது மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இப்படம் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் நாயகனான சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் சூர்யாவுக்கும், படக்குழுவினருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். OTT தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

கேப்டன் கோபிநாத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வெறும் படமாக மட்டும் இல்லாமல் பாடமாகவும் பலரது வாழ்க்கையில் அமைந்தது. சுதா கொங்கராவின் துல்லியமான கதையம்சம் இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக எடுத்துச் சென்றது.

சூரரைப்  போற்று Surya

தமிழ் சினிமாவுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைத்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும்  தமிழ் திரையுலக பிரபலங்களுக்கும் ஊக்கமளிக்கும் என நம்பலாம்.

விருதை அறிவித்தபோது சூர்யா, “இப்படம் எனக்கு மிகவும் Special ஆன ஒரு படம். இந்த படத்திற்காக நான் பெறும் முதல் விருது இது. என்னுடைய சக கலைஞர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.”, எனக் கூறியுள்ளார். சூர்யாவுக்கு விருது அறிவிக்கப்பட்ட வீடியோ அடங்கிய Twitter பதிவை கீழே காணுங்கள்.

மெல்போர்ன் இந்திய திரைப்பட திருவிழாவில் விருதுகள் பெற்றுள்ள சூரரைப் போற்று படக்குழுவினருக்கும், நடிகர் சூர்யா அவர்களுக்கும் சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.