Cinema News Specials Stories

மின்சார கண்ணன் ஸ்ரீனிவாஸ்!

90’ஸ் கிட்ஸ் மனதில் காதல் ஏற்பட்டதற்கு இவரும் ஓர் காரணம். சீனி போன்ற குரலால் மாயம் செய்யும் ஜீனி போல் வந்தவர் சிங்கர் ஸ்ரீனிவாஸ். இல்லை இல்லை கலைமாமணி ஸ்ரீனிவாஸ்.

அம்பாசமுத்திரத்தில் பிறந்த இவர் சமுத்திரம் தாண்டியும் பேசப்பட்டார். “படையப்பா” படத்தில் “மின்சார கண்ணா” பாடலுக்காகத் தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருது வாங்கினார்.

எத்தனை விருது வாங்கியிருந்தாலும் மெல்லிசை மன்னர் MSV அவர்களால் பாராட்டு பெற்றதும், அவர் இவரது வீட்டுக்கு வந்ததும் இவருக்கு பெருமை சேர்த்தது. இவர் பாடகர் மட்டும் அல்ல சிறந்த Compliments வாங்கும் Composer-ம் கூட.

முதலில் விளம்பரத்தில் பாடிய இவர், 90’s-ல் பத்மஸ்ரீ கமல்ஹாசன்-க்கும் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பல Legend-களுடன் பணிபுரிந்தது மட்டுமின்றி பல தலைமுறைகள் தாண்டிய இசைஞானி இளையராஜாவுடன் தலைமுறை படத்தில் “எங்க மகாராணி” எனும் பாடலை பாடியுள்ளார்.

எத்தனை சிறப்புகள் இருந்தாலும் இவரது வாழ்வை சிறப்பாக மாற்றியது இசைப்புயல் A.R.ரஹ்மான் தான். இவரது இசைப் பயணத்தை முறையாக “ரோஜா” படத்தில் தொடங்கி வைத்தார். ஆனால் ஸ்ரீனிவாசின் குரல் மிகவும் சிறப்பாக பேசப்பட்ட பாடல் “மின்சார கனவு” படத்தில் “மானாமதுர” என்ற பாடல் தான்.

ஆன்மிக பாடல் பாடிக்கொண்டிருந்த இவரது முதல் பாடல் நம்மவர் படத்தில் இடம்பெற்ற “சொர்க்கம் என்பது நமக்கு” என்ற பாடலே. இவரது குரலில் “ஆப்பிள் பெண்ணே” பாடல் கேட்டால் உருகாத மனமும் உருகும். இவரது குரலில் பொய் கூட அழகுதான், ஏனென்றால் “ஜோடி” படத்தில் இவர் பாடிய “ஒரு பொய்யாவது சொல் கண்ணே” பாடலை யார் தான் மறக்கமுடியும்.

Srinivas (singer) - An Indian Playback Singer - Talentsofworld Articles

அந்த சமயத்தில் Hit ஆன மற்றொரு பாடல் “காதலர் தினம்” படத்தின் “நினைச்சபடி நினைச்சபடி” பாடல். இன்றும், நாம் ரயிலில் பயணிக்கும் போது ஷாருக்கான் போல் “தைய தையா” பாடலுக்கு ரயில் மேல் ஆட்டம் போட தோன்றும். இப்படி தனது குரலால் பல மாயாஜாலங்களை செய்த பாடகர் ஸ்ரீனிவாஸ் துரைசாமி அவர்களின் வாழ்வில் என்றென்றும் புன்னகை நிறைந்திட Suryan FM-ன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ARTICLE BY RJ SUMEE