சுல்தான் Trailer இதோ !!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் Trailer Youtube-ல் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு விறுவிறுப்பான Commercial மசாலா படமாக சுல்தான் அமைந்திருக்கும் என சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகார்த்திகேயனை வைத்து ‘ரெமோ’ திரைப்படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் தான் சுல்தான் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். ரெமோ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகாஹிட் திரைப்படமாக அமைந்ததால், சுல்தான் திரைப்படமும் மக்கள் கொண்டாடும் விதத்தில் இருக்கக்கூடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். காமெடி, அதிரடி, Romance, Sentiment என அனைத்தும் கலந்த Commercial விருந்தாக சுல்தான் இருக்கும் என்பதை இப்படத்தின் trailer நமக்கு உணர்த்துகிறது. மேலும் இந்த Trailer-ஐ வைத்து பார்க்கும் போது கார்த்தி இப்படத்தில் அடியாட்களை தனக்கு கீழ் வைத்து சமாளிக்கும் பாணியில் இப்படத்தின் கதை அமைந்திருக்கும் என தெரிகிறது.

ஏற்கனவே விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் சூப்பர்ஹிட் பாடல்களாக வலம் வருகிறது. இந்நிலையில் சுல்தானின் trailer வெளியாகி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

சுல்தான் திரைப்படம் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி திரையில் வெளிவரவிருக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் Trailer-ஐ கீழே காணுங்கள்.