Cinema News Stories

Super Star-க்கு கிடைத்த Super விருது

Superstar-Rajinikanth-IFFI

ஐம்பதாவது சர்வதேச திரைப்பட விழா  கோவாவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இவ்விழா நவம்பர் 20 முதல் நவம்பர் 28 வரை நடைபெறும். இதில் Super Star ரஜினிக்கு இந்திய அரசு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கி கௌரவித்தது.

Super star IFFI
Super Star Rajinikanth receiving award

சர்வதேச திரைப்பட விழா 2019

இந்த விழாவில் சிறந்த திரைப்படங்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில், இந்த 9 நாட்களில் 250 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விழாவின் 50-ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக பெண் இயக்குனர்கள் இயக்கிய மற்றும் தயாரித்த 50 படங்கள் திரையுலக பெண்களை சிறப்பிக்கும் வகையில் திரையிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் தெரிவித்தார்.

இந்த விழாவில் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்கும் வகையில் நமது Super Star ரஜினிகாந்த் அவர்களுக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருதையளித்து கௌரவப்படுத்தியுள்ளது இந்திய அரசு. இந்த விருதுக்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

விழாவில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டார். அங்கு பேசிய ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தனது Inspiration என புகழ்ந்தார்.

Super star IFFI
Super Star Rajinikanth with Amitabh Bachchan and Union minister Prakash Javadekar

“இந்த விருதை எனக்கு வழங்கி கௌரவித்த இந்தியா அரசுக்கும், இங்கு அமர்ந்திருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் திரையுலக வாழ்க்கையில் எனக்கு உறுதுணையாக இருந்த என் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் ஆகிய என் அன்பார்ந்த தமிழ் மக்களுக்கும் இந்த மதிப்பிற்குரிய விருதை சமர்ப்பிக்கிறேன்”, என விழாவில் ரஜினி உரையாற்றினார்.

மேலும் இந்த விருதை தனக்கு அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இரண்டு டுவீட்களை தன ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இந்த விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். #PrideIconOfIndiaRAJINIKANTH என்ற ஹாஷ்டாகை உபயோகித்து ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் 44 வருட திரையுலக வாழ்க்கையில் அவர் 40-ற்கும் மேற்பட்ட விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். கலைமாமணி, பத்ம பூஷன் என பல மதிப்பிற்குரிய விருதுகளைப் பெற்று சாதனையின் சிகரமாக திகழ்கிறார் நமது சூப்பர்ஸ்டார்.

வெற்றிப் பயணம்

160-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரஜினி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 1975-ல் பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி, 44 வருடங்களில் தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் நினைத்தால் கூட மக்களின் சூப்பர்ஸ்டார் ஆகலாம் என நிரூப்பித்து, பலருக்கும் சிறந்த உதாரணமாக ரஜினி திகழ்கிறார்.

Super star IFFI
Super Star Rajinikanth at IFFI-2019

தற்போது A.R.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதைத் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கும் தலைவர் 168-ல் ரஜினி நடிக்கவுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற சூரியன் FM சார்பில் வாழ்த்துகிறோம்.