Cinema News Stories

#Suriya40 இனிதே ஆரம்பம் !!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கும் #Suriya40 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கப் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தை குறித்த முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே அடுத்தடுத்த Update-களுக்காக ரசிகர்கள் தினமும் காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

இதற்கு முன் பாண்டிராஜ் இயக்கிய “நம்ம வீட்டு பிள்ளை” திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. அது போல #Suriya40 திரைப்படமும் குடும்ப ரசிகர்களுக்கான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாண்டிராஜின் இயக்கத்தில் சூர்யா ” பசங்க 2 ” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Suriya40-க்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

இன்று நடைபெற்ற படப் பூஜையில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, தங்கதுரை, சுப்பு பஞ்சு அருணாச்சலம், சரண் ஷக்தி, பிரியங்கா மோகன், சரண்யா மோகன், தேவ தர்ஷினி, திவ்யா துரைசாமி, கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர். இப்பூஜையின் பிரத்யேக புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் வெளியாவதற்கு முன்னே, இன்று காலை முதல் சூர்யா ரசிகர்கள் #Suriya40 என்ற Tag-ஐ ட்விட்டரில் டிரெண்ட் செய்து வந்தனர். மாபெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடடிக்கவுள்ளதால், இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. பொதுவாக குடும்பப் பாங்கான திரைப்படங்களில் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, குடும்ப ரசிகர்களின் நாயகனாக வலம் வருவார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இப்படமும் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைய வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது .

Suriya40 மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பூஜை புகைப்படங்கள் அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.