Cinema News Stories

Suriya 40-ன் சூப்பர் Still !!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 40-வது படத்தின் பிரத்யேக புகைப்படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சூர்யா ரசிகர்கள் இப்பதிவை சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. அப்பூஜையில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சத்யராஜ், இளவரசு, தங்கதுரை, சுப்பு பஞ்சு அருணாச்சலம், சரண் ஷக்தி, பிரியங்கா மோகன், சரண்யா மோகன், தேவ தர்ஷினி, திவ்யா துரைசாமி, கலை இயக்குனர் தோட்டா தரணி ஆகியோர் பங்கேற்றனர். மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்குவதால், சூர்யா 40 குடும்பங்கள் கொண்டாடும் Commercial படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் பிரத்யேக புகைப்படம் ஒன்று வெளிவந்த போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.   இந்நிலையில் இன்று வெளிவந்த புகைப்படம் ரசிகர்களுக்கு Add-On இன்பத்தை அளித்துள்ளது.

சூர்யா பெரிய வாள் ஒன்றை தரையோடு இழுத்து நடப்பது போன்ற Silhouette ஸ்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ்-ன் ட்விட்டர் பதிவை கீழ காணுங்கள்.

இப்பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #Suriya40bySunPictures என்கிற டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.Suriya40 மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags