Cinema News Stories

“Talku Lessu Worku Moreu” பாடலின் வீடியோ !!!

சாந்தனு மற்றும் அதுல்யா இணைந்து நடித்துள்ள “முருங்கைகாய் சிப்ஸ்” திரைப்படத்தின் “Talku Lessu Worku Moreu” பாடலின் வீடியோ youtube-ல் வெளியாகியுள்ளது. ஒரு கலகலப்பான Folk பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலின் லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முருங்கைகாய் சிப்ஸ் திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தின் “ஏதோ சொல்ல” பாடல் சமீபத்தில் வெளியான ஒரு சிறந்த மெலடி பாடலாக வலம் வருகிறது. இப்பாடலின் வீடியோவும் சமூக வலைதங்களில் டிரெண்ட் ஆனது.

இப்படத்திற்கு தரன் குமார் இசையமைத்துள்ளார். “Talku Lessu Worku Moreu” பாடலின் வீடியோ வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இப்பாடலை பாடகர்கள் சாம் விஷால் மற்றும் ஷிவாங்கி இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் வீடியோவில் சாந்தனுவின் நடனம் பார்ப்போரை துள்ளாட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் ராபர்ட் அவர்கள் நடன அமைப்பை செய்துள்ளார். இப்பாடலின் இறுதியில் அவரும் சாந்தனுவும் சேர்ந்து நடனமாடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலின் வீடியோ, முருங்கைகாய் சிப்ஸ் திரைப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

“Talku Lessu Worku Moreu “பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.