Specials Stories Trending

தல செய்த தரமான சம்பவம் !!!

Thala Ajith

தல அஜித் அவர்கள் திரையில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ் ஓட்டுதல், டிரோன்கள் உருவாக்குதல், துப்பாக்கி சுடுதல், சமைத்தல் போன்ற பல திறமைகளை உடையவர். அந்த வகையில் சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் அமைக்கப்பட்ட தக்ஷா ட்ரோன் அமைத்தல் மாணவர்கள் குழுவிற்கு ஆலோசகராக அஜித் இருந்தது அனைவரும் அறிந்ததே.

இவரது ஆலோசனையில் உருவாக்கப்பட்ட இந்த ட்ரோன் கொரோனா ஊரடங்கு காலத்தில் கிருமி நாசினிகளை மக்கள் செல்ல முடியாத பகுதிகளில் தெளிப்பதற்கு உதவியது. அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ட்ரோன் ஒலிம்பிக்ஸில் இந்த தக்ஷா குழு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது தல அஜித் அவர்கள் சீராக ஒரு சிறிய ஜெட் ஒன்றை தரையிறக்கம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த சிறிய ஜெட் தரையிறங்குவதற்கு தடுமாறுகிறது, அதை அஜித் ரிமோட் மூலம் சாமர்த்தியமாக கையாண்டு ஜெட்டை தரையிறக்கம் செய்கிறார். இந்த வீடியோ அஜித் ரசிகர்களால் பெரிதளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த ஜெட்டை தரையிறக்கம் செய்ததும் தல அஜித்தை சுற்றியிருந்தவர்கள் கைதட்டி பாராட்டுகின்றனர். ரசிகர்கள் பகிர்ந்த தல அஜித்தின் ஜெட் தரையிறக்கும் வீடியோவை கீழே காணுங்கள்.