Cinema News Specials Stories

பேர கேட்டாலே ‘சும்மா அதிருதில்ல’

தளபதி விஜய் இந்த பேர கேட்டாலே, ‘சும்மா அதிருதில்ல’ அப்படிங்கற டயலாக் தான் நமக்கு நியாபகம் வரும். ஏன்னா அந்த அளவுக்கு புகழின் உச்சத்துல இருக்காரு.

தமிழ் சினிமால தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்காரு. இவருக்கு இந்த அளவுக்கு ரசிகர்களின் ஆதரவும், புகழும் கிடைக்க முக்கிய காரணம் இவருடைய விடாமுயற்சி தான்.

இவருடைய அப்பா S.A.சந்திரசேகர் நிறைய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் தான், அவர் மூலமா இவர் சினிமாவுக்குள்ள வேணா ஈஸியா வந்துருக்கலாம். ஆனா இப்போ இவ்ளோ பெரிய இடத்த பிடிக்க அவருடைய திறமை மட்டுமே காரணம்.

ஆரம்பத்துல இவர பாத்து ஒரு சிலர் கேலி பேசுனாங்க. ஆனா நாளடைவில அவங்களே இவரோட ரசிகர்களா மாறிட்டாங்க. இதுவே ஒரு பெரிய வெற்றி தான். சினிமாவ தாண்டி எல்லாருக்கும் இவர்கிட்ட புடிச்ச இன்னொரு விஷயம் இவரோட எளிமை தான்.

தமிழகத்துல தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துருக்க உச்சபட்ச நட்சத்திரமா இருந்தாலும், அவருடைய பேச்சும் சரி அவருடைய தோற்றமும் சரி ரொம்பவே எளிமையா தான் இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டேன் பாருங்க, இவரோட குட்டி ஸ்டோரி .

ஆமா இவரோட அடுத்த படத்துக்கு வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்கப்போ, அந்த படம் ரிலீஸ்க்கு முன்னாடி நடக்கும் பாடல் வெளியீட்டு விழாவுல, இவர் சொல்ற குட்டி ஸ்டோரிக்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே இருக்கு.

இவரோட அடுத்த படம் எப்ப வரப்போது அதுக்கு முன்னாடி என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போறாருனு தெரிஞ்சிக்க காத்திருப்போம். இன்று பிறந்த நாள் காணும் தளபதி விஜய்க்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்கள்.

Article By RJ Kavin