Cinema News Stories

‘வணக்கம்டா மாப்ள’ First Look இதோ !!!

இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ‘வணக்கம்டா மாப்ள’. இப்படத்தின் இரண்டு First Look போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது. சன் Entertainment இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து அம்ரிதா ஐயர், டேனியல் அண்ணீ போப், ரேஷ்மா, பிரகதி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு முன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘சிவா மனசுல சக்தி’ போன்ற சூப்பர்ஹிட் நகைச்சுவை படங்களை இயக்கிய M.ராஜேஷ் இப்படத்தை இயக்கவுள்ளதால், இப்படம் ஒரு காமெடி Commercial படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் Entertainment தயாரித்து சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் பிரத்யேகமாக வெளியிடப்பட்ட ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்தது. அந்த வகையில் சன் Entertainment தயாரிக்கும் ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படமும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அமையும் என எதிர்பார்க்கலாம்.

இப்படத்திற்கு கதையின் நாயகனான ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களே இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் பா.விஜய், சிநேகன், கானா வினோத், சரவெடி சரண் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இரண்டு First Look போஸ்டர்கள் சன் தொலைக்காட்சியின் ட்விட்டெர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

First Look போஸ்டர்கள் வெளியான சில நிமிடங்களிலிருந்தே ரசிகர்கள் பலரும் அந்த போஸ்டர்களை சமூக வலைதங்களில் பகிர்ந்து வருகின்றனர். ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் First look போஸ்டர்கள் அடங்கிய ட்விட்டெர் பதிவை கீழே காணுங்கள்.