வர்ணஜாலம் 2020 இதோ !!!!

ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் ஓவிய திறமையை ஊக்குவிக்கும் விதமாக சூரியன் FM நடத்தும் வர்ணஜாலம் இந்த வருடம் டிஜிட்டல் வர்ணஜாலமாய் அரங்கேறியுள்ளது…

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கும் இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது… மாணவர்களும் வீட்டிலேயே முடங்கியதால் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பும் குறைந்து விட்டது.

வீட்டில் அடங்கி கிடந்த மாணவர்களின் திறமைக்கு தீனி போடும் வகையில் சூரியன் FM இந்த வருடம் தனது வர்ணஜால போட்டியை டிஜிட்டல் வர்ணஜாலமாய் நடத்துகிறது..

மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத சூரியன் FM கடந்த 12 வருடங்களாக பள்ளி மாணவ மாணவியர்களின் ஓவிய திறமையை வெளிப்படுத்தும் விதமாக வர்ணஜாலம் என்னும் ஓவிய போட்டியை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது…

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 5000 மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற இந்த பிரம்மாண்ட ஓவிய போட்டிக்கு இது வரை இசைஞானி இளையராஜா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உட்பட பல நட்சத்திரங்களும் கலைஞர்களும் நடுவர்களாக இருந்து வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி உள்ளனர்…

வகுப்பு வாரியாக பிரிவுகள் கொண்டு நடத்தப்படும் இந்த ஓவிய போட்டியில் வெற்றி பெறும் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் விதமாக பல கண்கவர் பரிசுகளும் வழங்கப்படும் …

இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில், மாணவர்கள் சோர்ந்துவிட கூடாதென்பதை கருத்தில் கொண்ட சூர்யன் FM, டிஜிட்டல் உலகில் இது வரை எவரும் கண்டிராத பிரமாண்டமான ஓவிய போட்டியாக டிஜிட்டல் வர்ணஜாலத்தை அரங்கேற்றியுள்ளது…

மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் தங்கள் ஓவியங்களை அனுப்பலாம்.

  • 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை “எனக்கு பிடித்த விலங்கு ”
  • 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை “இயற்கையை காப்போம்”
  • 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை “எதிர்கால இந்தியா”

போட்டியில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் தங்களுடைய ஓவியத்துடன் சேர்த்து, பெயர், பங்கு பெரும் பிரிவு மற்றும் தலைப்பு, பள்ளியின் அடையாள அட்டை, தொலைபேசி எண் மற்றும் முகவரியை சேர்த்து சூரியன் FM-ற்கு கீழ்கண்ட வழிகளில் தங்களது பங்கேற்பை அனுப்பலாம்..

சூரியன் FM -ன் முகப்புத்தக பக்கத்திற்கு (https://www.facebook.com/SuryanFM/) சென்று Inbox செய்யலாம்.. அல்லது, suryanfm1@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம் அல்லது,
8668095588 என்னும் வாட்ஸாப் எண்ணிற்கும் தங்களது ஓவியங்களை அனுப்பலாம்…

ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி முதல் தங்களது ஓவியங்களை தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் பல மாணவர்கள் அனுப்பி வருகின்றனர்…

உங்கள் குழந்தைகளின் திறமையும் இந்த உலகம் அறிய இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, அவர்களின் கை வண்ணத்தை சூரியன் FM-ற்கு அனுப்பி வையுங்கள்.. பல பரிசுகளை வெல்லுங்கள்…

மேலும் விவரங்களுக்கு சூரியன் FM 93.5 தொடர்ந்து கேளுங்கள்….

About the author

shafin

உங்களில் ஒருவன்