Cinema News Specials Stories

Who is Ram Charan?

Ramcharan

Who is Ram Charan? என்ன தான் இவரு தெலுங்கு பட ஹீரோவா இருந்தாலும் தமிழ் நாட்டுல இவர தெரியாத ஆளே இருக்காது.

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆஸ்தான நண்பர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன்தான் ராம் சரண். 1988 மார்ச் மாதம் 27ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். 2007ஆம் ஆண்டுல ராம் சரண் தன்னோட சினிமா பயணத்த சிருத்தா-ன்ற படம் மூலம் ஆரம்பிச்சாரு.

இந்த படத்துக்காக சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகள் கூட வாங்கிருக்காரு. அடுத்த 2 வருசம் கழிச்சு 2009-ல தெலுங்குல வெளிவந்த திரைப்படம் மகதீரா. இந்த படத்த தமிழ்ல மாவீரன்-னு ரிலீஸ் பண்ணாங்க. இதுல காஜல் அகர்வால் heroineஆ பண்ணிருப்பாங்க. இந்த திரைப்படம் தான் ராம் சரண் வாழ்க்கையவே அடுத்த லெவெலுக்கு கொண்டு போச்சு.

11 Years for Magadheera: A look back at Ram Charan and Kajal Aggarwal  starrer | The Times of India

இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மனசுலயும் இடம் பிடிச்சாரு. மாவீரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2010-ல் ஆரஞ்சு, 2012-ல் ரச்சா, 2013-ல் நாயக், 2014-ல் எவடு-னு நிறைய தெலுங்கு படத்திலும் Zanjeer-னு ஒரு ஹிந்தி படத்திலும் நடிச்சாரு. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் Thoofan என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

ராம் சரண் நல்ல நடிகர் மட்டுமில்ல அவர் ஒரு நல்ல dancer-ம் கூட. அவரோட படங்கள்ல அவரோட கதாபாத்திரத்துக்காக நிறையவே உழைப்பாரு. 2018-ல இயக்குனர் சுகுமாரோட ரங்கஸ்தலம் திரைப்படத்துல ராம் சரண் பாதி செவித்திறன் கொண்ட சிட்டி பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ராம் சரணுக்கு மிகுந்த பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.

அதுமட்டுமல்ல அவரின் நடிப்பு திறன் அந்த திரைப்படத்தில் இருந்து ஒரு படி மேம்பட ஆரம்பித்து, அவருக்கு மேன்மேலும் புகழ் வர ஆரம்பித்தது. அடுத்ததாக அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் RRR.

Image

இந்த படத்துல ராம் சரண் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரம் பண்றாரு. ராம் சரண் படங்களிலேயே இந்த படம் மிக பிரம்மாண்டமாக இயக்குனர் திரு SS ராஜமௌலி மூலம் ஒரு புதுமையான படைப்பாய் நிமிர்ந்து நிற்க, ராம் சரண் புகழ் வானுயர ஓங்கி நிற்கிறது.

இவரு யார்னு கேட்டா இந்திய சினிமால தனக்குனு ஒரு இடம் அமைச்சிக்கிட்ட மகதீரானு சொல்லலாம், பயமில்லாத சிறுத்தானு சொல்லலாம், தன்னிகரற்ற துருவானு சொல்லலாம், இவர் தான் கோணிடில ராம் சரண் தேஜா.

Article By RJ Suba