Specials Stories Trending

BGM King யுவன் !!!!!

யுவன் ஷங்கர் ராஜாவோட BGM எத்தன வருஷம் ஆனாலும் அந்த Mass மேல ஒரு சின்ன தூசி கூட படாம  அப்படியே இருக்கு. மங்காத்தா BGM-ல மாஸ் காட்டுன அவரு தான் கைப்புள்ள BGM போட்டு நம்மல சிரிக்க வெச்சாரு. ஹீரோவ மாஸ் ஆக்குறதும் தமாஷ் ஆக்குறதும் அவர் கையில தான் இருக்கு. நாம எப்பவுமே மாஸ்-ஆ நினைக்குற பில்லா BGM எப்படி தலைவா பண்ணிங்கனு கேட்டா அவரு அசால்ட்டா  ஒரே வார்த்தைல “தல நடந்து வராருனு சொன்னாங்க, அவர நெனச்சதும் டக்குனு பில்லா  BGM வந்துடுச்சு”னு என்னமோ நூடுல்ஸ் 2mins ல ரெடி-ன்ற மாறி சொல்லறாரு. அவர் கிட்ட புடிச்ச விஷயமே நான்  பெரிய மியூசிக் director அதனால பெரிய ஹீரோ நடிச்சா தான் பண்ணுவன்னு அடம்புடிக்காம அவருக்கு கதை புடிச்சா சின்ன படம் பெரிய படம் இல்ல நல்ல  படத்துக்கு நான் பண்ணுவன்னு தங்கமீன்கள், ஆதலால் காதல் செய்வீர்-னு அவர் மியூசிக் பண்ணிருப்பாரு. “ராஜா கைய வெச்சா wrong-ஆ போனதில்லை ” அப்படின்ற வரிகள் இளையராஜாக்கு மட்டும் இல்ல அவர் புள்ள யுவன் ஷங்கர் ராஜாக்கும் பொருந்தும்.

Article by RJ Manish