நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் சில்லுக்கருப்பட்டி படத்தின் ட்ரைலர் வெளியாகி சினிமா ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதார்த்தமான கதைக்கருவைக் கொண்ட படமாக சில்லுக்கருப்பட்டி அமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், நிவேதிதா சதிஷ், சாரா அர்ஜுன், மணிகண்டன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது.
பூவரசம் பீப்பீ படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கும் இரண்டாவது படம் இது. ஆடை திரைப்படத்திற்கு இசையமைத்த பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
“ஆகச்சிறந்த போதை பேச்சு போதை, அதற்க்கு மயங்காதவர் உண்டோ?”-எனும் வரிகள் இந்த ட்ரைலரில் இடம்பிடித்துள்ளது. இது இப்படத்தில் மீது உள்ள ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.
இந்த ட்ரைலரில் இடம்பெற்றுள்ள “நகர நெரிசலில் மனிதம் நெய்யும் நான்கு நவீன கதைகள்”-எனும் வரிகள் இப்படம் நான்கு வெவ்வேறு கதைகளின் மூலம் ஒரு பொதுவான கருத்தை கூற வருகிறது என்பதை உணர்த்துகிறது.