சூர்யா ரசிகர்கள் நீண்ட நாளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி தாறு மாறாக டிரெண்ட் ஆகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதில் கடும் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, இந்த டிரைலர் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தின் டிரைலரை பார்க்கும் போது, “கனவுகளை வானளவில் வைப்பதில் எந்த தவறும் இல்லை, துணிந்தால் விண்ணையும் வெல்லலாம் “ என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தும் என தெரிகிறது. சுதா கொங்கராவின் திரைக்கதை அம்சம் இப்படத்தில் அதிரடியாகவும் அழகாகவும் அமைந்திருக்கும் எனும் நம்பிக்கையை இந்த டிரைலர் ரசிகர்களுக்கு கொடுக்கிறது.
நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு இயக்குனரின் எண்ணங்களுக்கு வண்ணங்கள் கொடுக்கும் வகையில் அமைந்திருப்பது இப்படத்தின் ட்ரைலரிலேயே தெரிகிறது. இப்படம் வருகிற நவம்பர் 12-ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகிறது. சூர்யாவின் மாறுபட்ட நடிப்பை கண்டு ரசிக்க அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர்ஹிட் ஆகி வருகிறது. இந்நிலையில் டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரைலரை கீழே காணுங்கள்.