Cinema News Stories

(நல்ல) நேரம்

நம்ம தமிழ் திரை உலகத்தை பொருத்தவரைக்கும் பெரிய நட்சத்திரம் பெரிய பட்ஜெட் அப்படிப்பட்ட படங்கள் தான் பெருசா மக்கள் மத்தியில் Reach ஆகும்.., குறிஞ்சி பூ மாதிரி அப்பப்ப சின்ன பட்ஜெட் படம் ஒன்னு, ரெண்டு ஹிட் ஆகும்.., அப்படி சின்ன பட்ஜெட் படம் ஹிட்டாகுறதுக்கு முன்னாடி ட்ரெண்ட் செட்டரா மலையாளத்திலிருந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிய நட்சத்திரங்கள் இல்லாம அல்லது புது முக நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் தமிழில் சக்க போடு போடும்.., இப்ப சமீபமா வந்த மஞ்சும்மேல் பாய்ஸ் படம் மாதிரி..,

அப்படி ட்ரெண்ட் செட்டரா 11 வருஷத்துக்கு முன்னாடி அதாவது 2013-ல ரிலீஸான நேரம் படத்தை பத்தி தான் இன்னைக்கு பார்க்க போறோம்.., இயக்குனர் அல்போன்ஸ்புத்ரன் முதற்கொண்டு கதாநாயகன் நிவின் பாலி கதாநாயகி நஸ்ரியா நசீம் என பல புது முகங்களுக்கு நல்ல நேரமா அமைந்தது இந்த நேரம் திரைப்படம்..,

படம் பண்றதுக்கு முன்னாடியே பக்கா பிளானோட கதாநாயகன் கதாநாயகியை அறிமுகப்படுத்துற விதமா நெஞ்சோடு சேர்த்து அப்படின்ற மலையாள ஆல்பம் Song-அ அல்போன்ஸ்புத்திரனே Direction பண்ணி ரிலீஸ் பண்ணாரு.., அது தமிழ் மலையாளம் அப்படின்னு ரெண்டு Language லயும் ஒரு ரவுண்ட் வர.., படத்த துணிஞ்சு எடுத்து 2013-ல சரியான நேரத்துல ரிலீஸ் பண்ணாரு… அந்த படம் தான் இந்த “நேரம்‘’.

இந்த படத்தோட ஆரம்பத்துல கதாநாயகனுக்கு கெட்ட நேரமாகவும் படத்தோட இறுதியில நல்ல நேரமாகவும் மாறுற மாதிரி கதை அமைக்கப்பட்டுருக்கும்.., படத்துல காதல், காமெடி, திரில்லர் என எல்லா Emotions-ஐயும் சிறுவிதத்தில் அளந்து Cook பண்ணி இருக்காரு இயக்குனர்.., வேலையில்லாத மென்பொருளாளர் தங்கையின் திருமணத்திற்காக வட்டி ராஜாவிடம் வாங்கிய கடன் தவணைக்கு கடைசி நாள், அந்த நேரம் பார்த்து காதலி வீட்டில் பிரச்சனை, அவள் தனது வீட்டை விட்டு ஓடி வந்துவிடுகிறாள்.

சரி பிரச்சனையை பார்ப்போம் என்றால், காதலியின் கழுத்து செயின் திருடு போய்விடுகிறது. இப்படி கவனக்குறைவாக இருப்பியா? என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பனிடமிருந்து வட்டி ராஜாவுக்கு கொடுக்கப் போன பணம் திருடு போக, பெண்ணின் அப்பா காவல்துறையில் புகார் செய்திருக்க, முடிவாக என்ன ஆனது என்பதை இயக்குனர் திருப்பங்களுடன் சொல்லியிருப்பார்.

இது தான் இந்த படத்தோட கதை கரு… படத்தோட இன்னொரு பலம் படத்தோட பாடல்கள் மற்றும் பின்னணி இசை.., ஒரு சில படத்துல இந்த பாட்டு ஏன் ஹிட் ஆச்சு.., எதுக்கு ஹிட் ஆச்சுன்னு தெரியாத மாதிரி ஹிட் ஆகும்.., அந்தப் பாட்டால அந்த படம் ஹிட் ஆகும்.., அந்த மாதிரி இந்த படத்துல PISTA THE RUN ANTHEM பாடல் அந்த நாட்களில் எல்லா கல்லூரி நடன விழாக்களிலும் கண்டிப்பா இறங்கி ஒரு குத்து குத்தும்..,

படத்தோட இன்னொரு பலம் Screen play.., இன்றைய சமுதாயத்தில் middle Class பசங்களுக்கு வரக்கூடிய எல்லா பணப் பிரச்சனையும் படத்தோட கதாநாயகனுக்கு வரும்போதெல்லாம் அவரு எப்படி overcome பண்ணி ஜெயிச்சு வந்து தன்னுடைய காதலை கரம் பிடித்தார் அப்டின்ற மாதிரி ரொம்ப விறுவிறுப்பா அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை..,

ஏற்கனவே சொன்ன மாதிரி படம் இரண்டு மொழியிலும் Hit ஆகணும்னு பக்கா பிளானோட எடுக்கப்பட்டதுனால தமிழ் நட்சத்திரங்களும் மலையாள நட்சத்திரங்களும் கலந்து எடுக்கப்பட்டிருக்கும். குறிப்பா போலீஸ் இன்ஸ்பெக்டரா வர ஜான் விஜய், தெறிக்க தெறிக்க வட்டிராஜாவாவாக வில்லத்தனம் காட்டுற பாபி சிம்ஹா, கதாநாயகி ஓட அப்பாவ நடிச்சிருக்க தம்பி ராமையா.., குறிப்பா படத்தோட இறுதியில கதாநாயகிக்கு நல்ல நேரமா வந்து அமையக்கூடிய நடிகர் நாசர் நடித்திருக்கும் கதாபாத்திரம்.., படம் முடிஞ்சு போற யாராலயும் மறக்க முடியாத அளவுக்கு ரொம்ப நகைச்சுவையா இருக்கும்.

கதைக்கும் அது ரொம்ப பலமாக அமைந்திருக்கும்.., மனுஷனுக்கு நல்ல நேரமும் வரும் கெட்ட நேரமும் வரும் கெட்ட நேரம் வந்தா துவண்டுடவும் கூடாது நல்ல நேரம் வந்தா ஓவரா ஆடிடவும் கூடாது என்ற உண்மையை எதார்த்தமா சொல்லக்கூடிய இந்த நேரம் திரைப்படம் வெளிவந்து இன்னையோட 11 வருடங்கள் ஆகி இருந்தாலும் இன்னும் எத்தனை வருஷங்கள் ஆனாலும் அல்போன்ஸ்புத்திரன், நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா இவங்க எல்லாருக்கும் ஒரு மயில் கல்லா அமைந்த படம் இதுன்னு சொன்னா அது மிகையாகாது.

Article by சேது மாதவன்