Cinema News Stories

“பூமி”-ன் இசை இதோ !!!!

லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தின் பாடல்கள் ஆல்பம் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் 2 பாடல்கள் Single track-களாக வெளிவந்த நிலையில், தற்போது முழு ஆல்பமும் வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஏற்கனவே லக்ஷ்மன், ஜெயம் ரவி, இமான் Combo-வில் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த இரு படங்களிலுமே பாடல்கள் மக்கள் கொண்டாடும் சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தது. பூமி படத்தின் பாடல்களும் வெளியான சில மணி நேரங்களில் இருந்தே சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தின் ஆல்பத்தில் 5 பாடல்களும் ஒரு theme music-ம் இடம்பெற்றுள்ளது. 5 பாடல்களில் 4 பாடல்களை பாடலாசிரியர் மதன் கார்க்கியும், கடைக் கண்ணாலே எனும் ஒரு பாடலை மட்டும் பாடலாசிரியர் தாமரையும் எழுதியுள்ளனர். இப்படத்தின் டீஸர், படப்பிடிப்பு புகைப்படங்கள், பாடல்கள் என அனைத்துமே படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

இப்படத்தின் டீஸர்-ஐ வைத்து பார்க்கும்போது இப்படம் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை எடுத்துச் சொல்லும் படமாக அமையும் என தெரிகிறது. ஏற்கனவே பேராண்மை, தனி ஒருவன் போன்ற Social Message சொல்லும் படங்களில் நடித்து ஜெயம் ரவி வெற்றி கண்டுள்ளதால், இப்படமும் வெற்றிப்படமாக அமையும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பூமி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நிதி அகர்வால், ரோனித் ராய், சதிஷ், தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல்களை போலவே இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற சூரியன் FM-ன் வாழ்த்துக்கள்.

பூமி இசை ஆல்பத்தின் பாடல்கள் வீடியோவை கீழே காணுங்கள்.