Cinema News Stories

டி. இமானுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் !!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2019-ற்கான திரைப்பட தேசிய விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் டி.இமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே ரசிகர்களும், திரையுலகினரும் இமானுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித் ஆகியோர் தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இமான் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “சூப்பர்ஸ்டார் அவர்கள் எனக்கு Call செய்து வாழ்த்தியதை எண்ணி உற்சாகமடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் 168-வது படமான ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு இமான் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் மட்டுமின்றி தளபதி விஜய் , தல அஜித் ஆகியோரும் இமானுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக இமான் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், தனது திரையுலக இசை பயணம் தளபதி விஜயின் ‘தமிழன்’ திரைப்படத்தில் இருந்து தான் தொடங்கியது எனவும், தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்க்காக தான் பெற்ற விருதுக்கு தளபதி விஜய் வாழ்த்துக்களை தெரிவிப்பது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இமானின் இப்பதிவை சூப்பர்ஸ்டார், தல மற்றும் தளபதி ரசிகர்கள் உற்சாகத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

தேசிய விருது பெரும் இசையமைப்பாளர் இமானுக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இமானின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

About the author

shafin

உங்களில் ஒருவன்