Cinema News Stories

வெளியாகுமா துருவ நட்சத்திரம்? மீண்டும் தாமதத்திற்கு என்ன காரணம்?!

SImran, Vikram, Radhika and DD from Dhruva Natchathiram
SImran, Vikram, Radhika and DD from Dhruva Natchathiram

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம், தயாரிப்பாளர்கள் தரப்பில் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு, நிதிநெருக்கடி காரணமாக கிட்டத்தட்ட கடந்த 5 ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது.

படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார், படத்தின் நிதிநெருக்கடியை சமாளிக்க அவர் திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். பல்வேறு தடைகளை தாண்டி படத்தின் Pre Release வியாபாரத்தை வைத்து படத்தின் மீதான கடனை அடைத்து படத்தை வெளியிட முடிவு செய்து, Post Production வேலைகளை முடித்து நவம்பர் 24 ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆல் இன் பிக்சர்ஸ் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் நவம்பர் 24 ஆம் தேதி காலை 10:30 க்கு முன் ரூ 2.40 கோடியை அந்நிறுவனத்திற்கு வழங்கினால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Pre Release வியாபாரமான Satellite மற்றும் Digital உரிமைகள் வாங்கப்படாத காரணத்தால் நீதிமன்றம் குறிப்பிட்ட நேரத்திற்குள் கவுதம் வாசுதேவ் மேனனால் பணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் நவம்பர் 24 அன்று துருவ நட்சத்திரம் படம் வெளியாகிவில்லை, நிதிப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டது. இன்னும் நிதிப் பிரச்னைகள் தீர்க்கப்படாமலே இருப்பதால் படவெளியிடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் உள்ள திரையரங்குகளுக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து கிடைத்த செய்தியின் அடிப்படையில் இப்படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. படம் வெளியாக தாமதம் ஆனாலும், படத்தின் Trailer, பாடல்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், மக்களிடையே படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது, பெரிய திரையில் துருவ நட்சத்திரத்தை வரவேற்க மக்கள் தயராகவுள்ளனர்.

Article By Sathishkumar Manogaran