Cinema News Stories

” டான் ” ஆட்டம் தொடங்கியது !!!

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய படங்கள் வெளிவரவிருக்கும் நிலையில் அவரது புதிய படத்தை குறித்த Update தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ” டான் ” என பெயரிடப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குனரும், பிரபல இயக்குனர் அட்லீயின் Associate இயக்குனருமான சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கவுள்ளார். இன்று இப்படத்தின் தொடக்கப் பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். இப்படத்தின் Title-ஐ வைத்து பார்க்கும் போது, இது ஒரு Commercial மசாலா படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ டான் ‘ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், S.J. சூர்யா, சூரி, பால சரவணன், முனிஷ் காந்த், காலி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது. இவ்வளவு பெரிய நட்சத்திர படை இணைந்து நடிக்கவுள்ளதால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னே இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு Rockstar அனிருத் இசையமைக்கவுள்ளார். சிவகார்த்திகேயன்- அனிருத் Combo இணைந்தாலே பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகிவிடும் என்பது கோலிவுட் வட்டாரத்தில் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. அந்த வகையில் டான் படத்தின் பாடல்களும் பட்டையை கிளப்பும் பாடல்களாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

‘ டான் ‘ திரைப்படத்தை லைக்கா Productions மற்றும் சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் பூஜை Still-கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்கள் அடங்கிய Official tweet-ஐ கீழே காணுங்கள்.