Cinema News Stories

INSPIRING HERO – நம்ம ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனர் , தயாரிப்பாளர் , இயக்குனர் , நடிகர் என்று இத்தனை அடையாளம் இருந்தாலும் எங்கள் அண்ணா , எங்கள் அப்பா என்று இவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அன்பும் அடையாளமும் ஏராளமானவை.

திறமையும் கொடை உள்ளமும் இவரது அசைக்க முடியாத சொத்து. சூப்பர் ஸ்டாரை பார்த்து ரசிப்பதையே வேலையாக செய்த நம்ம லாரன்ஸ்க்கு சினிமாவில் தனது பயணத்தை தொடங்க வழி வகுத்தும் சூப்பர்ஸ்டார் அவர்கள் தான்.

Raghava Lawrence shares his fanboy moment with Superstar Rajinikanth

வெஸ்டர்ன் டான்ஸ் , ஹிப் ஹாப் கூடவே லாரன்ஸ் ஸ்டைல்-னு இவருக்குனு ஒரு தனி டான்ஸ் ஸ்டைல் உருவாக்கினாரு. இவரது சுறு சுறுப்பும் , விவேகமும்… பின்னணியில் கூட்டத்தில் நடனம் ஆடிக் கொண்டிருந்த இவருக்கு சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இன்று வரை திரையில் அசத்திக் கொண்டிருக்கிறார்.

வெகுளித்தனமான நடிகராக திரையில் வந்த ராகவா லாரன்ஸ் இன்று Commercial ஹீரோவாகவும் கலக்குகிறார். ரசிகர்களின் நாடி பிடித்து அதற்கு தகுந்தவாறு இவர் படங்களை இயக்கவும் ஆரம்பித்தார். திரையில் இவருக்கு இருந்த தேடல் இவரது மிகப் பெரிய பலம் என்று சொல்லலாம், காரணம் இவர் தேர்ந்தெடுத்த அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்க இந்த தேடல் முக்கிய பங்கு வகித்தது.

இவருக்கு ஏன் இந்த தேவை, இல்லாத வேலை, ஏன் படம் நடிக்கணும்? ஏன் இயக்குனர் ஆகணும்-னு பல விமர்சனங்கள் வந்த போதும் இவரது உழைப்பும் , நோக்கமும் வெற்றியை சூடியது. வலியை அனுபவப்பிவருக்கு தான் மற்றவரின் வலி புரியும் என்று சொல்வார்கள். அதே போல் இவரது வறுமை தந்த வலி நிறைய உள்ளங்களின் வாழ்க்கையை மாற்ற வைத்தது.

எப்படி ஒரு மனிதனால் இத்தனை செயல்களை செய்து கொண்டே இருக்க முடியும்? இந்த கேள்வி பலருக்கும் எழுந்தது, அதற்கான பதில் ஒன்று தான். இவருக்கு தன் தாயின் மீது இருந்த அளவு கடந்த அன்பும் , கடவுள் பக்தியும் இவரை நேர்மையான மற்றும் நன்மை மிகுந்த செயல்களை தொடர்ந்து செய்ய வைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

கருப்பு பேரழகனான ராகவா லாரன்ஸ் இன்று 2000-த்துக்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை அழகாக மாற்றி இருக்கிறார். கடந்து வந்த பாதையை மறக்காமல் இருக்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணம் அவர் செய்யும் இந்த செயல்கள். இவர் சினிமாவில் மட்டும் ஹீரோ இல்ல REAL LFIE – லையும் ஹீரோ தான்!

Article by RJ Nandhini