மாமன்னன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. குறிப்பாக வடிவேலுவின் மாறுபட்ட கதாபாத்திரம், உதயநிதியின் மாறுபட்ட நடிப்பு, வில்லனாக பஹத் பாசலின் தோற்றம், பாடல்கள், படத்தின் காட்சியமைப்பு என அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் வெற்றி திரையரங்கம் படத்தை வெளியிட்டால் அதன் மீது தாக்குதல் நடத்துவோம் என தேனி மாவட்ட அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழக அரசே தடை செய்… தமிழகத்தில் ஜாதி மோதல்களை உருவாக்க நினைக்கும் மாமன்னன் திரைப்படத்தை உடனடியாக தடை செய்… போராட தூண்டாதே… என போஸ்டர் அடித்தும் ஒட்டியுள்ளனர்.
ஏற்கனவே மாமன்னன் படம் குறித்த பல பிரச்னைகள் மற்றும் சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில் இதுவும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், ”இது நமது சமூகத்திற்கான படம்… நம் சமூகத்தில் இந்த படம் பேசக்கூடிய அரசியல் உரையாடல் நிச்சயம் நிகழ வேண்டும்” என கமல்ஹாசன் இப்படம் குறித்து பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.