Cinema News Stories

உன்னாலே உணர்ந்தேனே வீடியோ இதோ !!

கதிர் நடித்து வெளிவந்த புதிய படமான சர்பத் திரைப்படத்தின் உன்னாலே உணர்ந்தேனே பாடலின் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான அஜேஷ் அவர்களின் இசையில் இப்பாடலை ஹரிச்சரண் பாடியுள்ளார்.

காதலியின் மீது தான் கொண்ட காதலை கதாநாயகன் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை மையமாக வைத்து இப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கதிர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கிவிட்டது.

இப்படத்தில் கதிர் உடன் இணைந்து சூரி, ரகசியா பிரசன்னா சித்தார்த் விபின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரபாகரன் இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவரே இப்படத்திற்கு ஒளிப்பதிவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உன்னாலே உணர்ந்தேனே பாடலுக்கு பிரபல பாடலாசிரியர் கு.கார்த்திக் அவர்கள் வரிகளை எழுதியுள்ளார்.
இப்பாடல் கேட்போருக்கு ஒரு புதுவிதமான புத்துணர்ச்சியை அளிக்கிறது.

இப்பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.