Cinema News Stories

சுனைனா-வை காப்பாற்றுமா ரெஜினா?!

தமிழ் சினிமா கொண்டாடித் தவறிய நடிகை, Most Underrated Actress சுனைனா அப்படினு நிறைய பேர் ரெஜினா பட ட்ரைலர்க்கு கீழ கமெண்ட் பண்ணியிருக்காங்க.

Yes உண்மையாவே தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய நடிகை தான் சுனைனா. தெலுங்கு, மலையாளத்துல அறிமுகமானாலும் தமிழ் சினிமால அறிமுகமான காதலில் விழுந்தேன் படம் மூலமா தான் சுனைனா பெரிய அளவுல பிரபலமானாங்க.

படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதுக்கு அடுத்ததா திரும்பவும் நகுல் கூட சேர்ந்து நடிச்ச மாசிலாமணி படமும் நல்லா போச்சு. அதுக்கு பிறகு சுனைனா நடிச்ச படங்கள் எதுவும் பெருசா போகல. நடுல நீர்ப்பறவை படம் எல்லாரலயும் பேசப்பட்டுச்சு.

சமர் படத்துல த்ரிஷா ஒரு கதாநாயகி, சுனைனா ஒரு கதாநாயகியா நடிச்சுருப்பாங்க. சுனைனா அப்படின்னா இன்னைக்கும் தமிழ் ரசிகர்களுக்கு அழகோ அழகு பாடல் தான் நியாபகம் வரும். அதுக்கு அப்பறமா வருசத்துக்கு 1, 2 படங்கள் இப்பவரைக்கும் பண்ணிட்டு இருக்காங்க.

தெறி படத்துல விஜய் ஜோடியா வருவாங்க. கடைசியா சுனைனா நடிப்புல பேசப்பட்ட ஒரு படம் சில்லு கருப்பட்டி. இப்ப 2023-ல கதாநாயகிய மையப்படுத்தி உருவாகியிருக்க ரெஜினா படத்துல நடிச்சிருக்காங்க.

இந்த டீசர் இப்ப வெளியாகி பலராலும் ரசிக்கப்பட்டிருக்கு. இந்தப் படம் சுனைனாக்கு வெற்றிப்படமா அமையனும். தமிழ் சினிமா ரசிகர்களால அவங்க கொண்டாடப்படனும்னு பலரும் யூட்யூப்ல பலரும் தங்களோட கருத்துகள சொல்லிட்டு இருக்காங்க. படம் எப்படியிருக்குனு பொறுத்திருந்து பாப்போம்.

Article By MaNo