அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் ஹரி கிருஷ்ணன் சமீபத்தில் சூரியன் FM-க்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் கபாலி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், “கபாலி படம் ரொம்ப வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம். ரஜினி சார் திடீரென கபாலி படத்திற்கு ஓகே சொன்னவுடன், பா.ரஞ்சித் சார் மிக வேகமாக படத்தை இயக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் எங்களால் இயக்குநரை சந்திக்க கூட முடியவில்லை.
எனவே கதை எல்லாம் எனக்கு தெரியாது. துப்பாக்கி கொடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நடந்து போ என்றனர். ஒரே ஷாட்டில் கிளைமேக்ஸ் எடுத்து முடித்து விட்டனர்.

கிளைமேக்ஸ் எடுத்து முடிக்கப்பட்ட பின் அனைவரும் என்னை பார்த்து என்ன பண்ணியிருக்க நீ, என்ன பண்ண தெரியுமா, இப்டிலாம் பண்ணலாமா என கேட்டனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் என்ன பண்ணேன் அவர்களிடம் பதில் கேள்வி எழுப்பினேன். அதற்கு பின்பு தான் எனக்கு விஷயம் தெரிந்தது. கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. கதையாக அது ஓகே தான். சூப்பர் ஸ்டார் உடன் நடித்தது மறக்க முடியாதது” என்று கூறினார்.
அதுமட்டுமன்றி மலேசியா ரஜினி ரசிகர்கள் குறித்தும், அவர் நடித்த மற்ற படங்கள் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :