நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த “பேட்ட” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மாளவிகா மோகனன் சிறுவயதிலிருந்தே ஊடகத் துறையில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். “பட்டம் போலே” எனும் மலையாள திரைப்படம் மூலம் மாளவிகா மோகனன் திரைத்துறையில் தடம் பதித்தார். மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ் என நான்கு மொழிகளில் மாளவிகா மோகணன் நடித்துள்ளார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படக்குழு சிறப்பு பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் “அந்த கண்ண பார்த்தாக்கா” பாடலின் ஒரு ஸ்டில் வெளியிடப்பட்டது போல தெரிகிறது. மேலும் அந்த போஸ்டரில் தளபதி விஜய் அவர்கள் காதுகளில் Earphone அணிந்து மொபைலை உற்றுநோக்கியபடி உள்ளார். இந்தப் போஸ்டர் குறித்த ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
Happy birthday @MalavikaM_ 😊 Wishes from the team #master😊 pic.twitter.com/pJZKiTQDcG
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 4, 2020
இந்த போஸ்டர் மட்டுமின்றி மாளவிகா மோகனனின் ரசிகர்கள் அவருக்கென பிரத்யேகமாக Common DP போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டரை மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருவது.
Here’s #MalavikaMohanan's Official Birthday Common DP from Fans 👍🏻 #HBDMalavikaMohanan @MalavikaM_ @MalavikaM_Fans pic.twitter.com/XchkM0DcRG
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 3, 2020
படங்கள் நடிப்பது மட்டுமின்றி மாளவிகா மோகனனின் சமூக வலைத்தளப் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் மாளவிகா மோகனனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இவரது பிறந்த நாள் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாளவிகா மோகனன் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் பட வெற்றிப்படங்களை மாளவிகா மோகனன் தன் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோள். நடிகை மாளவிகா மோகனனுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.