தன்னைத் தானே செதுக்கிய தல அஜித் அவர்கள் முதன் முறையாக கதாநாயகனாக நடித்த அமராவதி திரைப்படத்தில் ஒப்பந்தமாகிய நாள் இன்று. பொதுவாக நடிப்புத்துறையில் நடிகர்களின் திறமைக்கேற்ப அவர்களது ரசிகர் பட்டாளம் அமைந்திருக்கும். ஆனால் அஜித் அவர்களுக்கு திறமையையும் தாண்டி அவரது தன்னம்பிக்கைக்காகவும் நல்ல குணத்திற்கும் மட்டுமே கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.

தனது 28 ஆண்டு கால திரையுலக பயணத்தில் வெற்றி, தோல்வி என இரு பக்கங்களையும் தல அஜித் சந்தித்துள்ளார். வெற்றிகளை தன் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடும் பழக்கமும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகும் பழக்கமும் தல அஜித்துக்கு இருந்ததே இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அந்தத் தடைகளை எல்லாம் தனது தன்னம்பிக்கையால் உடைத்து மீண்டும் மீண்டும் எழுந்து பீனிக்ஸ் பறவை போல் தல அஜித் முயற்சியைக் கைவிடாத மகத்தான மனிதராய் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.
இவர் பெரும்பாலான விழாக்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், மேடைகளில் ரசிகர்கள் கைதட்ட பல வசனங்கள் பேசவில்லை என்றாலும், ஒரு சில தோல்விப் படங்கள் கொடுத்தாலும் இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ஒரு போதும் குறைந்தது இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இவரை வைத்து படங்கள் உருவாக்க முன்னணி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசைகட்டி நிற்பர். இத்தகைய புகழும், ரசிகர் பட்டாளமும் அமைவதற்கு இவரது கடின உழைப்பும் விடா முயற்சியும் மட்டுமே காரணம்.

தீனா படத்தில் இருந்துதான் அஜித் அவர்களுக்கு தல எனும் பட்டம் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் தல’யாக அஜித் கொண்டாடப்பட்டு வருகிறார். தன்னை கொண்டாடுவதில் கவனம் செலுத்தி தங்களது வாழ்க்கையை ரசிகர்கள் தொலைத்து விடக்கூடாது என எண்ணி தனது ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்தார். ஆனால் அஜித்தின் இச்செயலுக்கு பிறகே அஜித் அவர்களுக்கு ரசிகர்கள் இரட்டிப்பாகினர்.
எளிமையான பேச்சும், வியக்க வைக்கும் நற்குணங்களும், கணக்கிட முடியாத ரசிகர்கள் கூட்டமும் இவரை விட்டு என்றென்றும் நீங்கப் போவதில்லை என்பது எழுதப்படாத விதி. அமராவதியில் தொடங்கிய இவர் அமர்க்களம், காதல் மன்னன், காதல்கோட்டை, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், விசுவாசம் எனம் பல வெற்றி படங்களை அடுக்கடுக்காக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாடும் நடிகனாக மட்டுமில்லாமல் அந்த ரசிகர்களின் வாழ்வில் ஒரு முன்னுதாரணமாகும் அஜித் இருந்து வருகிறார். இவரது திரையுலக பயணம் 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் இவரது திரையுலக வாழ்க்கை வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என்று சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் அஜித்தின் 28 ஆண்டுகால திரையுலக பயணத்தை கொண்டாடும் விதத்தில் இவரது வெற்றிப் பயணத்தை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்