Cinema News Specials Stories

கமல்ஹாசன் எனும் சகாப்தம்!

Kamal Haasan

கமல்ஹாசன் அப்படிங்குற நடிகனோட பயணம் கலைத்துறைல இன்னையோட 64 ஆண்டுகள நிறைவு செஞ்சிருக்கு. இனிமேலும் அது தொடரப்போகுது.

1960-ல வெளியான களத்தூர் கண்ணம்மா படம் மூலமா தன்னோட 6 வயசுல தமிழ் சினிமால குழந்தை நட்சத்திரமா காலடி பதிச்சவர் கமல்ஹாசன். முதல் படத்துலயே நடிப்புக்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வாங்குனாரு. அங்க தொடங்கின அவரோட பயணமும், வெற்றியும் இன்னைக்கு கடைசியா வெளியான விக்ரம் வரைக்கும் தொடர்ந்துட்டே இருக்கு.

சினிமாவ பணம் சம்பாதிக்குறதுக்குனு பயன்படுத்தாத ஒரு முன்னணி நடிகர்னா அது கமல்ஹாசன். தான் சம்பாதிச்ச அத்தனை பணத்தையும் திரும்ப திரும்ப திரும்ப சினிமாவுக்காகவே செலவு பண்ணிய ஆள். எந்த அளவுக்கு அப்டினா தனக்குனு கூட எதுவும் சேத்து வைக்காம சினிமாவுக்காக செலவு பண்ணக் கூடிய ஆள். சினிமாவோட எதிர்காலம் என்னவா இருக்கும் அப்படிங்குறத முன் கூட்டியே கணிக்கக் கூடிய ஆள்.

OTT தளங்கள் வரதுக்கு ரொம்ப முன்னாடியே, தொலைக்காட்சி மூலமா படத்த வெளியிட போறேன்னு சொன்ன ஆள் கமல்ஹாசன். ஆனா அந்த சமயத்துல தியேட்டர்காரங்க எல்லாம் சேர்ந்து பிரச்னை பண்ணதால அத கை விட்டுட்டாரு. ஆனா இன்னைக்கு நிறைய படங்கள் நேரா டிவில, மொபைல்ல பாக்குற மாதிரி வெளியாகுது. இதுமட்டுமில்ல பல தொழில்நுட்பங்கள தமிழ் சினிமாக்கு முதன் முதலா அறிமுகப்படுத்தின ஆளும் கமல்ஹாசன் தான்.

சினிமால தன்னால முடிஞ்ச அளவுக்கு Experiment பண்ணி பாக்கக் கூடிய ஆள் கமல்ஹாசன். படம் எடுக்குறதுல ரொம்ப கஷ்டமான ஒன்னு முழுநீள காமெடி படம் எடுக்குறது. ஆனா அத பலமுறை வெற்றிகரமா செஞ்சு காட்டியவர் கமல்ஹாசன். அப்படி அவர் பண்ண படங்கள் தான் மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், தெனாலி இன்னும் பல படங்கள்.

ஒரு பாட்ட ரிவர்ஸ்ல எழுதி பாடிக் காட்டி, அத வித்தியாசமா படம் பிடிச்சும் காட்டினாரு. அதுதான் நீல வானம் பாடல். இவருடைய நிறைய படங்கள் ரொம்ப Advanced-ஆ இருக்கும். படமாக்குற விதத்துலயும் சரி, படம் பேசுற விஷயங்கள்லயும் சரி. அதனாலயே இவருடைய பல படங்கள் வெளியான சமயத்துல சரியா ஓடாம போயிடுச்சு. 5, 10 வருசம் கழிச்சு அந்த படங்கள் பயங்கரமா கொண்டாடப்பட்டுச்சு. அதுக்கு உதராணமா ஆளவந்தான், அன்பே சிவம் இந்த மாதிரியான படங்கள சொல்லலாம்.

Rajinikanth and Kamal Haasan
Rajinikanth and Kamal Haasan

பல அறிவியல் சார்ந்த விஷயங்களயும் இவர் படங்கள்ல பேசியிருப்பாரு. 2003-ல வெளியான அன்பே சிவம் படத்துல ஒரு சீன்ல சுனாமி அலைகள் பத்தி மாதவன் கிட்ட பேசுவாரு. 2004-ல தமிழ்நாடு சுனாமில சிக்கி சின்னா பின்னமாச்சு. அதே மாதிரி உலகத்தையே அழிக்கக் கூடிய வைரஸ் பத்தி தசாவதாரம் படத்துல 2008-ல பேசியிருப்பாரு. கொரோனா 2019-ல வந்துச்சு. இப்படி பல விஷயங்கள் அவர் படங்கள்ல இருக்கும்.

அதே போல தசாவதாரம் படத்துல 10 கதாபாத்திரங்கள்ல, வித்தியாச வித்தியாசமான வேடங்கள்ல, வித்தியாசமான மொழிகள் பேசி, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏத்த மாதிரி குரல மாத்தி அற்புதமா படத்த உருவாக்கியிருப்பாரு. கமலுக்கு நடிப்ப விட இயக்கம் தான் பிடிக்கும். நான் நடிக்க வரலனா இயக்குநர் ஆகியிருப்பேனு பல இடங்கள்ல சொல்லியிருக்காரு. ஆனா கமல்ஹாசன் இயக்குநராவும், நடிகராவும் இருக்குறது தான் அவரோட ப்ளஸ். அவர் கதையெழுதி அவர் உருவாக்கின கதாபாத்திரங்கள்ல அவரே நடிச்சு அதுக்கு அவ்வளவு அழகா உயிர் கொடுத்துருப்பாரு.

அதே மாதிரி சினிமால அவர் பண்ண உதவியால வாழ்ந்தவங்க பலர் இருக்காங்க. இல்லனு யார் கேட்டாலும் உதவக்கூடியவர். குறிப்பா தன்னோட சக நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இன்னைக்கு வரைக்கும் ஈகோ இல்லாம நெருங்கிய நண்பனா பழகிட்டு வராரு. ரஜினிகாந்தும் அப்படித்தான். இன்னைக்கு இருக்க இளைய தலைமுறை கூடயும் இயல்பா பழகுறாரு. இது எல்லாம் சேர்ந்து தான் கமல்ஹாசன்.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புனு சொல்லுவாங்க. அது கமல்ஹாசனுக்கும் பொருந்தும். எங்க போனாலும் அவர மக்கள் கொண்டாடிட்டு தான் இருக்காங்க. நடுல சினிமால இடைவெளி எடுத்துட்டு சின்னத்திரை போனார். அங்கயும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைச்சுது. அடுத்து அரசியல் களத்துல இறங்கி செயல்பட ஆரம்பிச்சாரு. அங்கயும் ஓரளவு மக்களுடைய அங்கீகாரம் கிடைச்சுருக்கு. நீண்ட இடைவெளிக்கு பின்னாடி திரும்ப சினிமால அவர் வழில வந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல விக்ரம் படத்துல நடிச்சாரு. படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

இப்பவும் சினிமா, அரசியல்னு அடுத்தடுத்த Commitments-ல ரொம்ப பிஸியா இருக்காரு. இனியும் இருப்பார். தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சில கமல் எனும் கலைஞனின் பங்கு பாதிக்கும் மேல நிச்சயமா இருக்கும். கவுதம் மேனன், லோகேஷ் கனகராஜ், மணிகண்டன் மாதிரி கமல்ஹாசன் படங்கள பார்த்து சினிமாவ நேசிச்சு சினிமாக்கு வரக்கூடிய ஆட்கள் இனி வரும் காலங்கள்ல இன்னும் நிறைய பேர் நிச்சயம் இருப்பாங்க.

Article By MaNo