Specials Stories

‘சந்திரயான் 3’ விண்ணில் பாயும் நிகழ்வை சூரியன் FM முகநூல் நேரலையில் காணுங்கள்!

இந்தியாவிலிருந்து சந்திரயான் 3 இன்று விண்ணில் பாய்கிறது. இந்த விண்கலம் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு நிலவை ஆய்வு செய்ய உருவாக்கிய திட்டம் தான் சந்திரயான். சந்திரனை ஆய்வு செய்வதால் இந்த திட்டத்திற்கு சந்திரயான் என பெயர் வைக்கப்பட்டது. சந்திரயான் திட்டங்கள் குறித்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ’சந்திரயான் 1’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை ‘சந்திரயான் 1’ கண்டுபிடித்து அதனை படம் பிடித்துக் காட்டியது.

அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு ’சந்திரயான் 2’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ’சந்திரயான் 2’ விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் வழி மாறி சென்று நிலவின் மேற்பரப்பி விழுந்து தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது.

சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவில் உள்ள மேலும் பல மர்மங்கள் வெளிச்சத்துக்கு வரும் என பலரும் காத்திருந்த நிலையில் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இதற்கு அடுத்ததாக இப்போது சந்திரயான் 3 விண்கலம் தற்போது விண்ணில் பாயப்போகிறது.

சந்திரயான் 2 அனுபவத்தின் மூலம், சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக அமைய பல மாற்றங்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர், எரிபொருள், சென்சார், மென்பொருள் என சந்திரயான் விண்கலத்தின் அனைத்து பாகங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு சந்திரயான் 3 விண்ணில் பாயவுள்ளது.

சந்திரயான் 3 விண்ணில் பாயும் நிகழ்வின் நேரலை சூரியன் FM முகநூல் பக்கத்தில் மதியம் 2 மணியிலிருந்து தொடங்கும். அனைவரும் இந்த முகநூல் நேரலையில் இணைந்து சந்திராயன் 3 விண்ணில் பாயும் நிகழ்வை கண்டுகளியுங்கள்.

Suryan FM Facebook Link : https://www.facebook.com/SuryanFM