Specials Stories Videos

திருவிழாக்களின் திருவிழா ‘சித்திரை திருவிழா’

திருவிழாக்களின் திருவிழா அப்டின்னு சித்திரை திருவிழாவ சொல்லுவாங்க ஏன் தெரியுமா? அந்த அளவுக்கு தமிழ்நாட்ல வருசா வருசம் நடக்கக்கூடிய பிரம்மாண்டமான திருவிழா இது. பெளர்ணமிக்கு முன்னாடி 10 நாள் கொண்டாடக்கூடிய திருவிழா சித்திரை திருவிழா.

சைவம் வைணவம் இரு சமய ஒற்றுமைக்காக கொண்டாடப்படக் கூடிய திருவிழா. இந்த திருவிழா கடந்த 400 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருது. சித்திரை திருவிழா ஆரம்பத்துல மதுரை பக்கத்துல இருக்கக்கூடிய சோழவந்தான் அப்டின்ற இடத்துல தான் நடந்துட்டு இருந்துச்சு.

அத சோழவந்தான்ல இருந்து மதுரைக்கு மாத்தின மன்னர் திருமலை நாயக்கர். ஒவ்வொரு வருசமும் மதுரை சித்திரை திருவிழால சுமாரா 5 லட்சம் பேர் பங்கேற்பாங்க. இவ்வளவு சிறப்புமிக்க சித்திரைத் திருவிழா எப்படி நடக்குது? எப்டி மக்கள் எல்லாம் அதுக்கு தயாராகுறாங்க? இந்த மாதிரியான விஷயங்கள இந்த வீடியோல பாத்து தெரிஞ்சுக்கோங்க.