Specials Stories

கிரிக்கெட் உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?- DETAILED Analysis

இந்தியாவில் நடந்து வரும் ICC ODI உலகக் கோப்பையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றதின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்தது இந்திய அணி, இந்தியாவிடம் தோற்றாலும் தென்னாப்பிரிக்கா, 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளி பெற்று இரண்டாவதாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மீதமுள்ள அணிகளில் இங்கிலாந்து, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறாத நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்னும் அரை இறுதி பந்தயத்தில் உள்ளன.

தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் இந்தியா தோற்றால் கூட புள்ளி பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் தான் இருக்கும், எனவே லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் நான்காவது இடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா அரை இறுதியில் விளையாடும்.

கிட்டத்தட்ட ஏற்கனவே அரைஇறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா அணி உட்பட அரைஇறுதி வாய்ப்பு இருக்கும் அனைத்து அணிகளுக்கும் நான்காவது இடம் பிடித்து இந்தியா உடன் அரையிறுதியில் விளையாடும் சாத்தியக்கூறுகள் உள்ளன .

ஆஸ்திரேலியா:– 5 வெற்றி 10 புள்ளி +0.924 ரன் ரேட்டுடன் இருக்கும் ஆஸ்திரேலியா அணி அடுத்து வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் கூட அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். இரண்டு அல்லது மூன்றாவது இடம் பிடிக்கவே ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், கடைசி இரண்டு ஆட்டங்களிலும் தோற்று நியூசிலாந்து, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அணிகள் அதிக ரன் ரேட்களுடன் அவர்களது மீதம் உள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா இந்தியாவோடு அரை இறுதியில் விளையாடும் .

தென்னாப்பிரிக்கா:- இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோசமான தோல்வியை சந்தித்து, ஆப்கானிஸ்தான் மற்றொரு போட்டியிலும் ஆஸ்திரேலியா ஏதாவது ஒரு போட்டியிலும் அதிக ரன் ரேட்டுடன் ஜெயித்தால் அரிதினும் அரிதாக தென்னாப்பிரிக்கா இந்தியாவோடு அரை இறுதியில் விளையாடும்.

நியூசிலாந்து & பாகிஸ்தான்:- அரை இறுதியில் இந்தியாவோடு விளையாடும் 90 % வாய்ப்பு இந்த இரு அணிகளுக்கு தான் உள்ளது. கடைசி லீக்கில் நியூசிலாந்து ஸ்ரீலங்காவுடன் நல்ல ரன் ரேட்டில் ஜெய்த்தாலே அரை இறுதியில் இந்தியாவோடு விளையாடும், நியூசிலாந்து ஸ்ரீலங்காவுடன் தோற்று பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தோடு ஜெய்த்தால் பாகிஸ்தானுக்கு இந்தியாவோடு அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

நியூசிலாந்து & பாகிஸ்தான் அணிகள் வரவிருக்கும் போட்டிகளில் தோற்று ஆப்கானிஸ்தான் & நெதர்லாந்து மீதமுள்ள போட்களில் அதீத ரன் ரேட்களுடன் மாயாஜால வெற்றி பெற்றால் இரு அணிகளும் இந்தியாவோடு அரை இறுதியில் மோத தயார் ஆகலாம்.

எனினும் நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணிகளே அரை இறுதியில் இந்தியாவை எதிர்த்து விளையாடும் என்பது பெரும்பாலானோரின் கணிப்பாக உள்ளது, இவ்விரு அணிகளில் நியூசிலாந்திற்கு இந்தியாவுடன் அரை இறுதியில் மோத மேலும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

Article By Sathishkumar Manogaran