Cinema News Specials Stories

திறமை இருந்தால் போதும்… ஒரு நல்ல கதை நாயகனை உருவாக்கும்!

நடிகர்கள் நடிக்க வந்துட்டாலே உருவ கேலின்ற ஒரு விடயம் கண்டிப்பா இருக்கும்.

அப்படிப்பட்ட கடும் விமர்சனங்களை எல்லாம் தாண்டி தான் ஒரு நடிகரும் நாயகனாக நடிக்க வந்திருக்காரு. அந்த நடிகரோட அப்பா உதவி இயக்குனர் ஆவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு. அதுக்காக நிறைய உழைச்சிருக்காரு.

அவரோட இளமை காலங்கள்ல ஆலைகளில் எல்லாம் வேலை பார்த்து இருக்காரு. அவரோட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதோ ஒரு வேலைய அவர் பார்த்து தான் ஆகணும். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் தான் வாங்க முடியும். அதையெல்லாம் பக்கத்துல இருந்து பார்த்து இருக்காரு. அவங்க அப்பா ஒரு ரூபாய மிச்சம் பிடிக்கிறதுக்காக 11 கிலோ மீட்டர் நடந்தே போவாராம்.

ஒரு வழியா சிரமப்பட்டு உதவி இயக்குநராகி அப்புறம் அவருக்கு படம் எடுக்கிற வாய்ப்பு கிடைத்து அவரும் ஒரு இயக்குனர் அப்படின்றத நிரூபித்து அதுக்கப்புறம் மறுபடி ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது தன்னோட 16 வயசு மகனை கதாநாயகனாக்கினார்.

அந்த 16 வயசு பையனுக்கு நம்ம படிப்பு போச்சே அப்படின்ற வருத்தம் இருக்கு. அழுகிறான், கோபப்படுகிறான், உண்ணாவிரதம் இருக்கிறான் ஆனா எதுவுமே மாறல. ஆனா இன்னைக்கு அந்த கதாநாயகன் ரொம்ப சந்தோஷப்படுறாரு, அன்னைக்கு தான் உண்ணாவிரதம் இருந்ததாலும் கோவப்பட்டதாலும் அழுததாலும் எனக்கு எந்த ஒரு மாற்றமும் நடக்கலன்னு.

அந்த கதாநாயகனுக்கு மேடையை பார்த்தாலே பயம். சுத்தி உள்ள மக்களைப் பார்த்தால் பதட்டம் ஆகிடுவாரு. அப்படி ஒருத்தர் இன்னைக்கு தலை சிறந்த நடிகரா இருக்காரு. ஆனா அவரு ஒரு விடயத்துல மட்டும் மிகவும் உறுதியாக இருந்தாரு.

ஊடகத்தை பார்த்து அவருக்கு எந்த ஒரு பயமும் இல்லை. ஆனால் ஊடகம் நம்ம நடிக்க வந்தோம் அப்படின்னா கண்டிப்பா நம்மள உருவ கேலி செய்யும் என்பதிலும் அவருக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதெல்லாம் தெரிஞ்சுதான் நடிக்க வந்தாரு.

அவர் நடிக்கும் படங்கள் நல்லா இருந்தாலும் கூட அவரை பத்தின கேலியும் கிண்டலும் குறையவே இல்ல. அடுத்தடுத்து நல்ல படங்களை கொடுத்தார். யாருப்பா இவரு இவ்ளோ அருமையா நடிக்கிறார் அப்படின்னு அவரை பத்தி நல்ல விடயங்களை பேச வச்சாரு. பாட்டு எழுதினார்; பாட்டு பாடினார்; பலரை அறிமுகப்படுத்தினார்; படம் எடுத்தார்; இப்படி எல்லாமே செய்தார்.

கிட்டத்தட்ட 22-23 வயசுல அவர் படைத்த சாதனை அப்படிங்கிறது கொஞ்சம் பெருசு. அதே சமயம் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் அவங்களோட அனுபவத்தை பத்தி பேசும்போது ஒரு 27 வயசு பையனா இவரோட அனுபவத்தை அதனுடன் ஒப்பிட்டு பாக்க முடிஞ்சது. ஆனா இவரு நடிக்க வரும்போது இவருக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு நம்ம முகம் நல்லா இல்ல என்றெல்லாம் வருந்தியிருக்காரு.

ஆனால் ஒரு இயக்குனருடைய பையன் என்பதால் ஒரு படத்துக்கு தோற்றம் முக்கியமில்ல, அந்த படத்துக்கு கதை தான் முக்கியம் என்பது இவருக்கு நல்லாவே புரிஞ்சிடுச்சு. ஏன்னா அந்த கதையிலிருந்து தோற்றத்தை தாண்டி ஒரு நட்சத்திரத்தை உருவாக்க முடியும் என்ற விடயத்தை இவர் நம்பினார்.

அடுத்தடுத்த படங்கள் நடிக்கும் போதும் அவர் அதைத்தான் எதிர்பார்த்தார். ஆனா அவரு எதிர்பார்த்ததுனால பல பேரோட விமர்சனங்கள் அவருக்கு பெருசாவே தெரியல. இதுதான் நடக்க போகுதுன்னு முன்கூட்டியே அவருக்கு தெரிஞ்சிருச்சு.

ஒரு கட்டத்தில் இந்தியிலும் நடிக்க ஆரம்பிச்சாரு இவரோட நடிப்பு திறமையை பார்த்து இந்தியில் ஓரிரு படங்கள் நடிக்க கூப்பிட்டாங்க. 2013-ல இந்தில இவர் முதல் படத்தை பார்த்து நிறைய கதைகள் வந்தாலும், என்னோட கதை நல்லா இருக்கணும், அது மக்களுக்கு பிடிக்கணும் என்பதற்காக கிட்டத்தட்ட 10 லிருந்து 15 கதைகளுக்கு மேல புரட்டி இந்தியில் இரண்டாவது படமும் நடிச்சாரு.

அதுக்கப்புறம் அவரோட பயணங்கள் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல பல பாடல்கள் எழுதினார். அவர் எழுதின எல்லா பாடல்களுமே ஹிட் ஆச்சு. அவர் படங்களில் மட்டும் இல்லாம வேற ஹீரோ படங்களிலும் அவர பாட வச்சாங்க. அவர் பெரிய தயாரிப்பாளரானார்.

ஒரு மிகப்பெரிய ஹீரோவோட படத்தை தயாரிக்கும் அளவுக்கு பெரிய தயாரிப்பாளர் ஆனார். அவர் ஒரு அடையாளமாக மாறினார். தமிழ் சினிமா அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னாவே இவருடைய படம் தரமா இருக்கும்ப்பா அப்படின்னு சொல்ற அளவுக்கு அந்த ஹீரோ உயர்ந்து வந்தார்.

இப்போ அவரு தமிழ் சினிமால ஒரு தவிர்க்க முடியாத நடிகர். இப்போ இல்ல இனி எப்போதுமே. ஏன்னா பல ஹாலிவுட் படங்களுக்கான கதையும் அவருக்காக காத்துகிட்டு இருக்கு. ஒரு ஹாலிவுட் படத்தில நடிச்சு ரிலீஸாகி நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. அந்த நடிகரோட பெயர் தனுஷ்.

ஒய் திஸ் கொலவெறி, ரவுடி பேபி இப்படி அவர் படங்களில் வந்த பல பாடல்கள் Youtube-ல சாதனை பண்ணிருக்கு. பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் இப்படி வெற்றிமாறன் கூட்டணில இவர் நடித்த எல்லா படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.

தனுஷ் & வெற்றிமாறன் என்று சொன்னாலே வெற்றி நிச்சயம். அதேசமயம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவரு நடிச்ச கர்ணன் படமும் ஒரு தனி உச்சத்துக்கே இவரை கொண்டு போச்சு. ஆனால் எவ்வளவு உச்சத்துக்கு போனாலும் ஒருத்தவங்க நமக்கு அன்பை கொடுத்தால் அவங்களுக்கு அன்பை இரட்டிப்பா கொடுப்போம்; நம்மள வெறுக்கிறார்களா அவங்களுக்கும் அன்பையே கொடுப்போம்; அன்பு தான் எல்லாம்… என்று ரொம்ப அன்பா பேசக்கூடிய ஒரு நபர்தான் தனுஷ்.

அன்பை பகிர்வோம்! அன்பாய் இருப்போம்!

எண்ணம் போல் வாழ்க்கை ! எண்ணம் போல்தான் வாழ்க்கை ..!

Article By RJ Jo

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.