Specials Stories

இசை அசுரன் – ஜி.வி. பிரகாஷ் குமார் !!!

வடசென்னை படத்துல ஒரு வசனம் வரும், “தம்மாத் துண்டு Anchor தான் அவ்வளோ பெரிய கப்பலையே நிறுத்தும்”-னு. அந்த வசனம் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் நடிகர் ஜி.வி பிரகாஷுக்கு நல்லாவே பொருந்தும்.

நாம School படிக்கும் போது, படிக்குற நேரம், விளையாடுற நேரம்-னு நேரத்த செலவிடுவோம். அது மாதிரி ஜி.வி படிக்குற நேரம், பாடுற நேரம், இசை கத்துக்குற நேரம்-னு தன்னோட இளமை பருவத்துல இருந்தே இசையோடு வளர ஆரம்பிச்சாரு, அதுக்கு காரணம் அவரோட குடும்பம்.

ஜி.வி பிரகாஷோட அம்மா இசைபுயல் A.R. RAHMAN-னோட அக்கா. தன்னோட தாய் மாமா A.R. Rahman இசையில் சின்ன வயசிலேயே சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு, குச்சி குச்சி ராக்கம்மா-னு பல பாடல்கள பாடி இருக்காரு.

2006-ல் வெயில்-னு ஒரு தமிழ் படம் ரிலீஸ் ஆகுது, அந்த படத்துல வந்த பாட்டெல்லாம் பட்டி, தொட்டி ,சிட்டி-னு எல்லா இடத்துலையும் செம்ம Hit . குறிப்பா அந்த படத்துல வந்த ‘வெயிலோடு விளையாடி’ பாட்டு, எப்படி New year-னா ‘இளமை இதோ இதோ’ பாட்டு இப்ப வரை எல்லோரும் பாடுறோமோ அதே மாதிரி வெயில்-னா இந்த வெயிலோடு விளையாடி பாட்டு தான். சரி இந்த பாட்டுக்கெல்லாம் இசையமைச்சது யாருனு பாத்தா எல்லாரையும் இந்த சின்னபையனானு ஆச்சரியத்துல ஆழ்த்தினாரு ஜி.வி.பிரகாஷ்.

30+ G. V. Prakash Kumar Best Images And Wallpapers - TamilScraps.com

கிரீடம், பொல்லாதவன், காளை-னு வரிசையா ஜி.வி இசையமைத்த எல்லா Album-ம் Hit , அதனாலேயே ஜி.வி-க்கு அவரோட 8வது படமே Superstar உடன் அமைந்தது, “குசேலன்” படத்துல வந்த ஒவ்வொரு பாட்டையும் தனக்குள்ள இருந்த Superstar ரசிகனா வெளிய கொண்டு வந்து இசையமைச்சு இருப்பாரு ஜி.வி. அதே படத்துல வந்த ‘சினிமா சினிமா’ பாட்டு தமிழ் சினிமாக்கு ஒரு Tribute Song-னு கூட சொல்லலாம்.

ஜி.வி-யோட வாழ்க்கை-ல அவருக்கு ரொம்ப Support-ஆ இருக்கிறது அவரோட காதல் மனைவி சைந்தவி. இவங்க ரெண்டு பேரும் பாடுற Melodies-ஆ இருக்கட்டும், இல்ல ஜி.வி இசைல வர்ற மற்ற melodies-ஆ இருக்கட்டும், காதலிக்காதவங்கள கூட காதலிக்க வச்சிடும். அந்த அளவுக்கு ஜி.வி-யோட Melodies-க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு.

வெற்றிமாறன்,AL விஜய் போன்ற Directors-க்கு ஜி.வி தான் மிக விருப்பமான இயக்குனர். ஆடுகளம், மதராசப் பட்டிணம், மயக்கம் என்ன, ராஜா ராணி, தெய்வத்திருமகள், தெறி, சூரரைப் போற்று, அசுரன்-னு ஜி.வி-யோட படங்கள்-ல வந்த பாடல்களும், பிண்ணனி இசையும் இசை ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்சது-னு சொல்லாம்.

ஆனா ஜி.வி-யோட Masterpiece-ஆ இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாப் போகும் படம்-னா “ஆயிரத்தில் ஒருவன்”. இசைத்துறையில் இருக்க அத்தனை விருதுகளுக்கும் சொந்தமாக வேண்டிய ஒரு படம் ஆயிரத்தில் ஒருவன். பிண்ணனி இசை, பாடல்கள்-னு எல்லாமே சும்மா அப்படி இருக்கும், எல்லாம் பாத்து பாத்து பண்ணியிருப்பாரு ஜி.வி.

ஜி.வி 2015 பொங்கலுக்கு ரிலீஸ் ஆன Darling படம் மூலமா Hero-வா அறிமுகமானாரு. அதுக்கப்பறம் வருஷத்துக்கு ரெண்டு படமாச்சும் ரிலீஸ் ஆகிட்டே இருந்துச்சு ஜி.வி நடிப்புல. ஆரம்பத்துல Comedy, Lover boy-ஆ படிச்சுட்டு இருந்த நம்ம Hero ஜி.வி பிரகாஷ், பாலா இயக்கத்துல வந்த ‘நாச்சியார்’, ராஜிவ் மேனன் இயக்கத்துல வந்த ‘சர்வம் தாளமயம்’ போன்ற படங்கள்-ல ரொம்ப வித்தியாசமான நடிப்ப கொடுத்திருந்தாரு.

நடிப்பு, இசை , தயாரிப்பு-னு தமிழ் சினிமால தவிர்க்க முடியாத கலைஞனா இருக்க நம்ம ஜி.வி பிரகாஷ் குமார்-க்கு சூரியன் Fm-ன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  • Article by Rj Srini