Cinema News Specials Stories

கோலிவுட் முதல் பாலிவுட் வரை!

அருண் குமார்னு சொன்னா யாருப்பா அது உன் friend-ஆனு கேப்பீங்க. ஆனா அதே அட்லீனு சொன்னா? தமிழ்நாட்டுல இவரத் தெரியாத ஆட்களே இருக்க மாட்டாங்க.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் செல்லமா “அட்லீ சாப்டியா இட்லின்னு” கிண்டல் பண்ணுவாரு . அதுமட்டுமில்ல, அட்லீ முதன் முதலில் சிறந்த அறிமுக இயக்குனர்னு விருது வாங்குனதும் அவரோட மானசீக குருவான இயக்குனர் ஷங்கர் அவர்கள் கையில் தான். நம்ம குரு கைல இருந்தே நம்ம best-னு ஒரு விருது வாங்குறோம்னா நம்ம குருவுக்கும் சரி நமக்கும் சரி ரொம்ப special தானே. அதே போல தான் அட்லீயும் அந்த தருணத்துல நெகிழ்ந்து போயிருப்பாரு.

நம்ம பிரமாண்ட நாயகன் இயக்குனர் ஷங்கர் அவர்களோட எந்திரன் திரைப்படத்துல அட்லீ AD அதாவது அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினாரு. அதுக்கப்புறம் நம்ம ஷங்கர் சாரோட நண்பன் திரைப்படத்துலயும் அட்லீ அவர்கள் அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிருக்காரு.

நம்ம பிரமாண்ட இயக்குனர்கிட்ட கத்துகிட்ட வித்தைகள வச்சு சுயமா ஒரு திரைப்படம் எடுக்க முடிவும் பண்றாரு. நம்ம அட்லீயோட வாழ்க்கைல அவரு எப்பவும் மறக்க முடியாத நபர்கள்ல ஒருத்தரா அவரோட நெருங்கிய நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இருக்காரு.

Image

சொல்லப்போனா நம்ம சிவகார்த்திகேயன் தான் தயாரிப்பாளர் ராம நாராயணன் கிட்ட அட்லீனு ஒருத்தர் சாதிக்க வாய்ப்பு தேடிட்டு இருக்காருன்னு சொல்லி சாதா அட்லீய இயக்குனர் அட்லீயா மாத்த ஒரு புள்ளி வச்சாரு. பள்ளத்துல இருந்து மேல ஏற கயிறு கிடைச்சா போதும் ஏறிடலாம்னு துணிஞ்சு அட்லீ களத்துல இருங்குறாரு.

2013-ல அட்லீ அவர்கள் தன்னோட முதல் திரைப்படத்தை வெளியிடுறாரு. நடிகர் ஆர்யா அவர்களை மனசுல வச்சி அவருக்காகவே எழுதப்பட்ட திரைப்படம் தான் ராஜா ராணி. நயன்தாரா, ஜெய், நஸ்ரியான்னு நட்சத்திரங்கள் கூட கூட வெற்றிக்கான படிகள் பக்கத்துல வர ஆரம்பிச்சுது. படத்தை பார்த்துட்டு அட்லீயோட குருவும் ரொம்ப சந்தோஷப்பட்டாரு.

Image

அதுக்கப்றம் அட்லீ தன்னோட முழு எண்ணங்களையும் சினிமால கொடுத்து நம்ம தளபதி விஜய் கூட தொடர்ச்சியா தெறி, மெர்சல், பிகில்னு அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிப்படங்கள் கொடுத்து “எங்க அண்ணனுக்கு நான்தான்டா பண்ணுவேன்… அப்படிதாண்டா பண்ணுவேன்னு” ரசிகர்கள் மனசுல அதிகமான உயரம் தொட்டு இப்போ பாலிவுட்ல ‘கிங் கான்’னு அழைக்கப்பட்ற ஷாருக்கான் மற்றும் நயன்தாராவ வச்சு ‘ஜவான்’னு ஒரு Pan India திரைப்படம் எடுத்துட்டு இருக்காரு.

அட்லீ-ன்ற அருண் குமாரின் சாதாரண பயணம் இன்னைக்கு பெரிய வெற்றிப் பயணமா மாறியிருக்கு. அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதில் சூரியன் FM பெருமிதம் கொள்கிறது.

Article By RJ Jae, Vellore.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.