Cinema News Specials Stories

தமிழ் சினிமாவின் தனி அத்தியாயம் ‘கெளதம் மேனன்’

ஹீரோயின் அப்டினாலே இவர் படத்துல வர ஹீரோயின் தான் அழகு; ஹீரோ அப்டினாலே இவர் படத்தோட ஹீரோ தான் MASS-UH; WRITING & SCREENPLAY அக்கா தங்கச்சி மாறி அப்டி ஒட்டி உறவாடும் & FINALLY, காதல்னு சொன்னாலே அது GVM தான்.

இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு ஸ்கூல் முடிச்சுட்டு அவசர அவசரமா Uniform மாத்திட்டு விண்ணைத் தாண்டி வருவாயா பாக்க போனேன். அப்போ எனக்கு படத்த புரிஞ்சிக்கிற வயசு இல்ல. ஆனா ஒவ்வொரு வசனமும் மனசுல அப்டியே பதிஞ்சுது. இன்னும் கூட அந்த படத்த பார்த்தா நம்மள அறியாம “ஒரு வெட்கம், சின்ன சிரிப்பு!” உண்மையிலே “GVM For A Reason” தான். தமிழுக்கு ஒரு POP-CULTURE கொண்டு வந்தாரு. GVM (படம், பாட்டு, ACTION, FIGHT, POLITICS, SLANG)இப்படி எல்லாத்துலயும் ஒரு வித்யாசம் இருக்கும்.

20 வருஷம் தாண்டி இன்னுமே மீடியால STRONG-ஆ நிக்குற ஒரு டைரக்டர் GVM. GVM ஓட ROMANCE HISTORY-ல SCALE BY SCALE வைக்கணும்னா முதல்ல வைக்குறது இந்த படம் தான். “மின்னலே”. அடை மழை வரும் அதில் நனைவோமே அடடா அடடா… மொத்த 90’ஸ் வாழ்கையவே COLOURFUL-AH அழகா மாத்துனது இவரோட இந்த மின்னலே தான். “MADDY MADDY OH OH MADDY”னு வரப்போ பொண்ணுங்க மட்டுமில்ல பசங்க கூட சில்லரைய செதரவிடுவாங்க.

GVM ஓட STORY நமக்குள்ள ஏன் இவ்ளோ பெரிய தாக்கத்த ஏற்படுத்துதுன்னா அவரோட சொந்த குணாதிசியங்கள் தான். அவரு படத்துல இருக்க MALE CHARACTERS-க்கு அது இருக்கும். அதனாலேயே அது ஒரு பெரிய தாக்கத்த ஏற்படுத்தும். விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக்-AH இருக்கட்டும்; நீதானே என் பொன்வசந்தம் வருண்-AH இருக்கட்டும்; வாரணம் ஆயிரம் சூர்யாவா இருக்கட்டும். இப்டி எல்லாமே GVM ஓட Versions-ah தான் இருக்கும்.

அதுலயே ஒரு Personal Connect வந்துரும். Romance-ல மட்டுமில்ல Action-லயும் அவரோட எதிரொலிய நீங்க பாக்கலாம். “காக்க காக்க”, “என்னை அறிந்தால்” இதுலயும் அவரோட Touch தெரியும். தொட்டதெல்லாமே பொன் ஆகிட்டா பிரச்னையே இல்லல்ல. இவரோட Life-லயும் பல Flops இருந்துருக்கு. Wrong Decisions இருந்துருக்கு. ஆனா, எதுக்குமே Regret பண்ணாத ஒருத்தர் தான் GVM.

அவரோட Personal Stories மட்டுமே இன்னும் 15-க்கும் மேல இருக்குமாம். அதுமட்டுமில்ல புது Writers ஓட Scripts வந்தாலும் அத எடுக்க Ready-ah தான் இருக்காரு. Love, Friendship or Professional Relationship எல்லாத்துலயுமே அவரோட Gut Feeling-ah நம்பறாரு GVM. அவரு காதல்ல விழாம இருந்துருந்தாலோ, காதல் இல்லாம இருந்துருந்தாலோ இந்த அளவுக்கு படம் பண்ணிருப்பாரானு கேட்டா அவரே யோசிக்கிறாரு.

அவரோட வாழ்க்கையையே “படிப்புல இருந்து, காதல்ல இருந்து, கல்யாணம் வரைக்கும்” எல்லாமே அவரோட உள்ளுணர்வு நம்பி மட்டும் தான் எடுத்துருக்காரு. So GVM கிட்ட நான் கத்துக்குட்டது என்னனா எப்போவும் நம்ப Gut Feeling-ah Strong ah நம்பனும்னு. THE MOST ROMANTIC PERSON IN THE PLANET- GVM “WE LOVE YOU”.

Article by RJ Naga