Cinema News Specials Stories

ராஜபாளையம் முதல் நமது மனது வரை!

ராஜபாளையத்துல பிறந்த இவர் சினிமாத்துறைல ராஜாவாக போறாருனு அவரும் நினைக்கல, அவரை தெரிஞ்சவங்களும் நினைக்கல. ஆனா அவருக்கு சின்ன வயசுல இருந்தே நடிகர் ஆகணும்னு ஒரு தீராத ஆசை.

அப்போ அவரு ஆசை வச்ச மாதிரி, இப்போ அவரை போல ஒரு நடிகர் ஆகணும், ஒரு இயக்குனர் ஆகணும், ஒரு வாய்ஸ் Artist ஆகணும்னு நாம ஆச வைக்கிறோம். இவருடைய நடிப்பும் சரி இவருடைய இயக்கமும் சரி எதார்த்தத்தை வெளிப்படுத்துச்சு. சமுத்திரத்திற்கு கூட எல்லை உண்டு, ஆனால் நம் சமுத்திரக்கனி அவர்களுக்கு எல்லை இல்லை.

அவருடைய பள்ளிப்பருவத்தை முடித்து விட்டு, சென்னைக்கு திரைத்துறை வாய்ப்புக்காக கிளம்பும் போது அவருடைய அப்பா அவருகிட்ட, நீ சினிமா வாய்ப்புக்கு தான் சென்னைக்கு போறனு சொன்னா நம்ம சொந்தக்காரங்க தப்பா பேசுவாங்க. நீ படிக்க போறேனு சொல்லிட்டு போ, அதான் கவுரவம்னு சொல்லிருக்காரு.

அப்றம் நம்ம ஹீரோ சமுத்திரக்கனி சென்னைல வாய்ப்பு தேடி ரொம்ப அலைஞ்சிருக்காரு. அப்போதைக்கு அவரு ஒரு Law காலேஜ்ல Join பண்ணி தன்னோட படிப்பையும் தொடருறாரு. அதே சமயம் சென்னைல எந்த ஒரு ஷூட்டிங் நடந்தாலும் அத பாக்குறத பழக்கமா வச்சிருந்தார். பல இடங்கள்ல அவரு முயற்சி பண்ணியும் அவருக்கு மூட்ட மூட்டையாய் தோல்விகள் மட்டும் தான் கெடச்சுது.

ஒரு முறை இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள் தன்னுடைய 100-வது படமான பார்த்தாலே பரவசம் திரைப்படத்திற்காக Assistant Directors-அ அவர் தேர்வு பண்றாருனு கேள்விப்பட்டாரு. அந்த வாய்ப்ப Miss பண்ணாம நம்ம கதாநாயகன் சமுத்திரக்கனி உடனே இயக்குநர் சிகரம் கூட Assistant-ஆ சேர்றாரு.

அதுக்கப்பறமா நம்ம ஹீரோ நிறைய கத்துக்கிட்டு சின்னத்திரைல களமிறங்கி அங்கயுமே ஒரு கலக்கு கலக்கி பலவிஷயங்கள தெரிஞ்சிக்கிறாரு. அதே சமயம் அவருக்கு தன்னுடைய குரு கூட Work பண்ணும்போது அவருக்கு Direction-லயும் Interest வர 2003-ல உன்னைச் சரணடைந்தேன் படம் இயக்கி நம்ம மனசுல இயக்குநரா இடம் பிடிச்சார்.

2008-ல சுப்ரமணியபுரம் படத்துல கனகு கதாபாத்திரத்த ரொம்ப சிறப்பா பண்ணி தமிழ் சினிமா பிரியர்கள் மத்தில சமுத்திரக்கனினா யாருனு தெரியவச்சாரு. சமுத்திரக்கனி-னு சொன்ன உடனே நமக்கு அவருடைய ஒரு சில கதாபாத்திரங்கள்… உதாரணத்துக்குக் கனகு, தயாளன், குணா இப்படி மனசுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களா இருக்கும்.

இப்போ பல திரைப்படங்களில் நாம சமுத்திரக்கனிய பார்க்க முடியும். இப்போ அவரு உயரத்துல இருக்காருனா அவரு பட்ட கஷ்டங்களை அவர் படிக்கட்டா மாத்திருக்காருனு நாம தெரிஞ்சிக்கணும். அதுமட்டுமில்லாம அவர் திரைத்துறை மேல வச்ச தீரா காதல் தான் இன்னைக்கு வர அவர கைவிடாம இருக்கு.

அவருடைய பிறந்தநாளுக்கு Suryan FM-ல இருக்குற அனைவரும் வாழ்த்திக் கொள்கிறோம்.

RJ Jae, Vellore.