வெற்றிமாறன் சொன்ன Quotes-ல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். “Ranjith is a Politician who makes films“ ரஞ்சித் அப்டிங்குற இயக்குனர் தமிழ் சினிமா இல்ல இந்தியன் சினிமாக்கு கிடைத்த முக்கியமான ஆளுமை. இந்தியன் சினிமா வரலாறுல ஒரு புரட்சிகரமான இயக்குனர்னு அழுத்தமா சொல்லலாம்!
அவர் இங்க வந்து படம் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து சாதி அப்டிங்குற விஷயம் இந்தியால எவ்ளோ இடங்கள்ல இருக்கு என்கிற விவாதத்தை மக்கள் மத்தில துவக்கி இருக்கு. இந்த மாதிரி படம் எல்லாம் ஓடாதுனு சொல்லிட்டு இருக்குற அப்போ ரஞ்சித் அதை மொத்தமா ஒடைச்சு நிறைய மாத்தினாரு. அது கமர்ஷியலாவும் ஹிட் ஆகுது, படத்துக்கு பிஸ்னஸ் வளர்ச்சி அடையுது, Political-ஆ நம்ம எப்படிபட்ட படங்கள் பண்ணி இருக்கோம் என்ற யோசனைய உண்டாக்குது.
அட்டகத்தி என்ற ஒரு யதார்த்த படத்துல இருந்து ரஞ்சித் நம்ம எல்லாருக்கும் அறிமுகம் ஆகிறார். பொதுவா வாழ்வியல் படங்கள்லாம் இங்க பெருசா ஓடாது என்கிற Trend-அ ரொம்ப நாளைக்கு அப்பறம் அட்டகத்தி மாத்தி எழுத்துச்சு, கமர்ஷியலா பெரிய வெற்றி ஆகுது.
மெட்ராஸ் படம் ரஞ்சித்தோட Best Work-னு நிறைய பேர் சொல்றாங்க. வட சென்னைல ஒரு படம் வருதுன்னு ரொம்ப Stereotype பண்ணி மட்டும் தான் படம் வந்துருக்கு, அதை மொத்தமா மாத்தி கார்த்தி மாதிரியான ஒரு ஸ்டார் வச்சு பண்றாரு. அந்த படம் எதிர்பார்ப்பு இல்லாம வந்து பெரிய வெற்றி ஆகுது. மெட்ராஸ் படத்தோட Soundtrack-அ நம்ம மறக்க முடியுமா?!
அடுத்து அவரோட Career-ல பெரிய Step – Back To Back ரெண்டு படம் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட… கபாலி – ஜெயில்ல இருந்து வெளிய வர Gangster அவனோட மனைவிய தேடி போகிறான் என்ற கதையலாம் இங்க யாரும் தொட்டதே இல்ல. ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் ரஜினிகாந்தின் சிறப்பான நடிப்ப எல்லாரும் Witness பண்ணோம்.
காலா – கபாலில வந்த விமர்சனத்த மனசுல வச்சு காலா-ல ஒரு சமமான வில்லன Open பண்ணி படம் பண்றாரு. மறுபடியும் நம்ம ரஜினிகாந்தின் சிறப்பான நடிப்ப வேற ஒரு கோணத்துல Witness பண்ணோம். சார்பட்டா பரம்பரை – ரஞ்சித்தின் தலைசிறந்த படைப்பு இந்த நாள் வரைக்கும்! கோவிட் டைம்ல ரொம்ப கஸ்டத்துல எடுத்த படம் OTT-ல வந்து பெரிய வெற்றி அடைஞ்சு ஐயோ இந்த படம் Theatre-க்கு ஏன் வரலைன்னு நிறைய பேர ஃபீல் பண்ண வெச்ச படம் இது. அந்த உலகத்துக்குள்ள நம்ம எல்லாரையும் கூட்டிட்டு போயிட்டாரு.
ரஞ்சித்-அ ஒரு சாதியவாதின்னு சொல்றப்ப சிரிப்பா இருக்கும். சாதி வேணாம் சமத்துவம் முக்கியம் என்று பேசுற மனிதரை இங்க சில பேர் இப்படியும் பேசிட்டு இருக்காங்க. அவரு பேசுற கருத்த தாண்டி As a Craftsman-அ அவரோட Craft-அ Touch பண்ண இங்க யாராலயும் முடியாது. ரஞ்சித் என்ற மனுஷன் அட்டகத்தி பண்ணி வெற்றி ஆகலனா, நமக்கு பரியேறும் பெருமாள் என்கிற ஒரு முக்கியமான படம் கிடைச்சிருக்காது. நீலம் புரொடக்ஷன்ல வந்த முதல் படம் அது. நான் மட்டும் வளரக் கூடாது, எல்லாரையும் நான் மேல வர வைப்பேனு அவர் நிறைய விஷயம் பண்றாரு.
Neelam Productions, Casteless Collective, Koogai Library இப்படி நிறைய கலாச்சார பண்பாட்டு ரீதியான விஷயங்கள வெற்றிகரமா பண்ணிட்டு இருக்காரு. இப்படி இன்னும் நிறைய இருக்கு. தமிழ் சினிமால மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கிய திரு பா.ரஞ்சித் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூரியன் FM சார்பாக ❤️💯