Specials Stories

சச்சின் டெண்டுல்கர்

Sachin

சதமடித்து சாதனை படைத்த சச்சின் அவர்களை பற்றி நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விஷயங்கள் இருப்பினும் ரசிக்கும் ரசிகனின் முதல் காதலாய் அன்றிலிருந்து இன்று வரை அசைக்கமுடியாத ரசிக பட்டாளத்தை கொண்டவர் தான் சச்சின் அவர்கள்.

கிரிக்கெட் என்று சொன்னவுடன் முதலில் நியாபகம் வருவது என்றால் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் தான். சச்சின் டெண்டுல்கர் 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ரமேஷ் மற்றும் தாய் பெயர் ரஞ்சனி ஆகும். இவர் மிகவும் புகழ்பெற்ற எழுத்த்தளர் மற்றும் கவிஞர்.

கலை குடும்பத்தில் பிறந்தாலும் இவரின் காதல் கிரிக்கெட் மீதே மலர்ந்தது. 11 டிசம்பர் 1988 அன்று மும்பை மற்றும் குஜராத் இடையேயான முதல் தர கிரிக்கெட் போட்டியில் சச்சின் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். முதல் போட்டியில் சதம் அடித்த பெருமைக்கும் உரியவர் சச்சின் அவர்கள் மட்டும் தான்.

14 வயதிலேயே, பள்ளிப் போட்டியில் 664 என்ற உலக சாதனையில் 326 ரன்கள் எடுத்து பம்பாய் பள்ளி மாணவர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து பல தொடர்களில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்
2011 உலகக் கோப்பை வெற்றி பெற்ற தொடரில் 53.55 சராசரியில் 482 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

2012-ல் மொத்தமாக 34,000 ரன்களைக் கடந்த வரலாற்றில் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை டெண்டுல்கர் பெற்றார். 16 மார்ச் 2012 அன்று, ஆசிய கோப்பையில் வங்காளதேசத்திற்கு எதிராக அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 100வது சதத்தை எட்டினார்.

அர்ஜுனா விருது – 1994
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது – 1997-1998
விஸ்டன் “ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்” – 1997
பத்மஸ்ரீ – 1999
மகாராஷ்டிரா பூஷன் விருது – 2001\
கிரிக்கெட் உலகக் கோப்பையில் “போட்டியின் ஆட்டக்காரர்” – 2003
ICC உலக ODI XI – 2004 மற்றும் 2007
விளையாட்டுப் பிரிவில் “ராஜீவ் காந்தி விருது” – 2005
பத்ம விபூஷன் – 2008
ஐசிசி விருது – 2010 இல் “ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்”
லண்டனில் “மக்கள் தேர்வு” மற்றும் “விளையாட்டுகளில் விதிவிலக்கான சாதனை” – 2010க்கான ஆசிய விருதுகள்
“பிசிசிஐ ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்” விருது – 31 மே, 2011
“காஸ்ட்ரோல் இந்திய கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்” விருது – 28 ஜனவரி, 2011
விஸ்டன் இந்தியா சிறந்த சாதனையாளர் விருது – 11 ஜூன், 2012
ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கெளரவ உறுப்பினர் – 6 நவம்பர், 2012
பாரத ரத்னா – 2014
தெற்காசியாவிற்கான யுனிசெப்பின் முதல் பிராண்ட் தூதுவர் – 28 நவம்பர், 2013.
“உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மக்கள்” – Times 100
என இவரின் சாதனைகளோடு விருதுகளின் வரிசையும் நீளம் தான் .

அவரது 24 ஆண்டுகால அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கையை விட்டு 16 நவம்பர் 2013 அன்று அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். காட் ஆப் கிரிக்கெட், லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என பல பரிணாமங்களில் சச்சின் டெண்டுல்கர் இருந்தாலும் இன்றும் என்றும் கிரிக்கெட் நாயகன் நமது சச்சின் அவர்கள் மட்டுமே .

Article By RJ PRIYAAL