Specials Stories

’இந்திய ராணுவ தினம்’ பற்றி தெரியுமா?

’இந்திய ராணுவ தினம்’ 1949 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் முதல் இந்திய படையை நியமித்ததன் நினைவாக ஆண்டுதோறும் ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகிறது. தேசத்தின் பாதுகாப்பில் இந்திய ராணுவத்தின் வீரம், தியாகங்கள் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை கௌரவிக்கும் நாள் தான் இது. 2024 ஆம் ஆண்டு இந்திய ராணுவ தினத்தின் கருப்பொருள் ’தேசத்தின் சேவையில்’ என்பதாகும்.

இந்த தீம், இந்திய ராணுவத்தின் இருப்பின் முக்கிய சாராம்சத்தை உள்ளடக்கியது. தேசத்தின் பாதுகாப்பிற்கும் அதன் மதிப்புகளை நிலை நிறுத்துவதற்கும் இந்திய வீரர்கள் செய்த தன்னலமற்ற தியாகங்களை இது எடுத்துக்காட்டுகிறது தனிப்பட்ட நலன்களை விட தேச சேவையின் முதன்மையை வலியுறுத்தும் ’சுயத்திற்கு முன் சேவை செய்’ என்ற இந்திய ராணுவத்தின் பொன்மொழியுடன் இந்த தீம் எதிரொலிக்கிறது.

ஜனவரி 15, 1949 இல் ஜெனரல் சர் பிரான்சிஸ் ராய் புச்சருக்கு பதிலாக ஜெனரல் கே.எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் முதல் இந்திய தலைமை தளபதியாக பொறுப்பேற்றார். இந்த வரலாற்று நிகழ்வு இந்திய ராணுவம் பிரிட்டிஷ் கட்டளையில் இருந்து இந்திய தலைமைக்கு மாறியதை அடையாளப்படுத்தியது. இது சுயாட்சி மற்றும் தேசிய பெருமையின் புதிய சகாப்தத்தை குறிக்கிறது..

இந்த முக்கியமான தருணத்தை அங்கீகரிக்கும் வகையில் அப்போதைய இந்திய அரசாங்கம் ஜனவரி 15 ஆம் தேதியை இந்திய ராணுவ தினமாக அறிவித்தது. பொதுவாக இந்திய ராணுவ தலைமையகத்தில் இராணுவ தினம் கொண்டாடப்படும். அங்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

குறிப்பாக சிறப்பு ராணுவ அணிவகுப்பு ஏரியல் போர் பயிற்சிகள் மற்றும் இருசக்கர வாகனங்களால் செய்யப்படும் பிரமிடுகளின் அணிவகுப்பு போன்ற மனங்களை கொள்ளை கொள்ளும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படும் . இந்திய ராணுவ தினம் தேசிய பெருமையின் அடையாளமாக மாறி உள்ளது.

தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதற்கும் அதில் மதிப்புகளை நிலை நிறுத்துவதற்கும் இந்திய ராணுவம் எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது என்பதை குடிமக்களுக்கு நினைவூட்டுகிறது. இதற்கெல்லாம் நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்கும் நாள் இது. இந்த நாளில் நடைபெறும் நிகழ்வுகள் இந்திய ராணுவத்திற்கும் குடிமக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துகிறது. பரஸ்பர புரிதலையும் பாராட்டையும் வளர்க்கிறது. ஜெய்ஹிந்த்.

Article By RJ Jebaraj