Specials Stories

திரை மொழியில் கவிபாடும் மிஷ்கின் !!!

திரைப்படங்களை வெறும் ஊடகம் என்பதாக மட்டும் சொல்லி விட முடியாது, அது ஒரு இலக்கிய வகையாக மாறியிருக்கின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் பல்வேறு கலைஞர்களை கொண்டு பல்வேறு பரிணாமங்களில் திரைப்படங்கள் கண்டுள்ளது. ஆனாலும் சண்முகராஜா என்ற இயற்பெயர் கொண்ட மிஷ்கின் தமிழும் தமிழரும் காணாத மொழிகளை காட்டிய, இன்னும் இன்னும் தமிழர்களுக்கு காட்ட துடிக்கும் ஒரு பாக்கியவான். திரைப்படங்களை, காட்சிகளை வைத்து கோர்க்காமல் கதைகளை கொண்டு கோர்க்கும் கலைஞன்.

Director Mysskin is now officially on Twitter!

OTT க்கள் உலகை மேலும் சுருக்கியிருக்கிறது, ஜப்பானிய திரைப்படங்கள், சோவியத் திரைப்படங்கள், இரானிய படங்கள் என அவ்வளவு எளிதாக நம் கைகளில் வருகின்றன. அவற்றில் பல நமக்கு மட்டுமல்ல பெரும்பாலான மக்களுக்கு புரிவதில்லை, அந்த கலையின் நுட்பம் மக்களை சென்றடைவத்தில் சிக்கல் இருக்கிறது. மொழி,இனம், கலாச்சாரம் என பல. ஆனால் இதை நம் மக்களுக்கு ஏற்றவாறு இயக்கும் இயக்குனர் மிஷ்கின்.

மிஷ்கினை பற்றியும் அவர் திரைப்படங்களையும் காட்சிகளையும் அதன் தனித்துவத்தையும் விளக்குவதற்கு ஒரு நாள் போதாது. இருள் சூழ்ந்த ரயில்வே underground subway யில் துப்பரவு பணி செய்யும் ஒரு பெண் ஒரு Parcel-ஐ கண்டு அதிர்ந்து காவலர்களை அழைத்து வருவார். வசனம் வரும் “சார், ஒரு அட்டைப்பெட்டியில் இரண்டு வெட்டப்பட்ட கைகள்”, இப்படி ஒரு திரை வடிவம் மிஷ்கின் அன்றி வேறெவரும் செதுக்கியதாக தெரியவில்லை.

Mysskin Wiki, Biography, Age, Family, Movies, Images - News Bugz

நள்ளிரவு, ஆள் ஆரவாரமற்ற நீண்ட சாலை, Sodium Vapor விளக்கு அணைந்து அணைந்து எரிகிறது, உயிர் உருக செய்யும் ஒற்றை Violin இசை பின்னணி, Close Shot, Mid shot, Top angle , Lower Middle angle என காட்சிகள் மாறும், அத்தனையும் நாம் ரசிக்கும் வண்ணம் திரை ஒளியில் கவி ஒலிக்கும் கலைஞன் மிஷ்கின் என குழந்தையும் சொல்லும்.

எது தேவையோ அதை மட்டும் தொகுக்கும் யதார்த்த படைப்பாளி. மஹாபாரத template-ல அஞ்சாதே இயக்கிய தனிப்பெரும் திறமைசாலி. Fyodor Dostoevsky என்ற புகழ் மிக்க ரஷ்ய எழுத்தாரின் “The Idiot” என்ற நாவலின் முக்கிய கதாபாத்திரம் தான் மிஷ்கின். அதையே தன் பெயராக மாற்றிக்கொண்டார் இந்த புத்தக பித்து.

கலங்கரை விளக்காய் தான் கண்டதை கற்றதை தனக்கென உரித்தான ஒரு திரை மொழியில் கவிபாடும், இந்த முண்டாசு கட்டா பாரதி தனது 50 வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். சூரியன் FM-ன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Article by
Roopan Kanna,
Associate Producer,
Salem.