Specials Stories Trending

சலாம் ‘சச்சின்’

Sachin

கிரிக்கெட் உலகில் ஒருமித்த குரலில் ஒன்றாக இந்தியா முழுக்க உச்சரித்த ஒரு பெயர் ‘சச்சின்’ உண்மையில் அது பெயரல்ல ஓர் உணர்வு .

ஒட்டுமொத்த இந்தியர்களும் அவர்கள் செய்யும் வேலைகளை மறந்து ‘ஸ்டன்னாகி’ அவர் களத்தில் ‘99’ ரன்களில் நிற்கும் போது எப்படியாவது ‘100’ஐ தொட வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம், அப்படியான நேரத்தில் வரும் விக்கலையும் அடக்கிக் கொண்டு அந்த சிக்கலான தருணத்தை வேடிக்கை பார்த்தவர்கள் பலர். இன்றும் கிரிக்கெட் உலகின் கடவுள் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் மட்டுமே. ரன் மெஷின் என்று தன் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுபவர்.

ஓய்வினை அறிவித்து ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் தகர்க்க முடியாத சாதனைகளை படைத்து அதன் மேல் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் அவர் இன்றும் God Of Cricket என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சம காலத்தில் ஒப்பற்ற பல கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட் களங்கள் கண்டிருந்தாலும் இப்படி ‘ஓர் சுத்தியல் வீரனை’ நிச்சயம் கண்டதில்லை என்றே சொல்லலாம்.

ஆஸ்திரேலியாவின் மறைந்த வார்னே போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களை பார்த்து அனைத்து பேட்ஸ்மேன்களும் மிரண்ட போது ஒற்றை மனிதராய் பல முறை அவர்களுக்கு வார்னிங் கொடுத்தவர்.
களத்தில் ரியல் KGF GOOSEBUMPS MOMENT மிக சாதரணமாக நடக்க காரணமாக இருந்தவர். தன் அனுபவ அதிரடிகளின் மூலம் TEXT BOOK ஷாட்ஸ் ஆடி பௌலர்களுக்கு பால பாடம் எடுப்பது கண் கொள்ளாக் காட்சி.

வரலாறு நிகழ்வதில்லை அது பிறக்கிறது. ஒரு முறை அவர் அவுட் ஆனதும் ஊரில் பல இடங்களில் ‘டிவி’க்கள் உடைக்கப்பட்டதும் வரலாறு தான்… சச்சின் இன்றும் வாழும் வரலாறு !

பல இக்கட்டான நேரங்களில் இந்திய அணி வெற்றியை முத்தமிட அவர் தன் மட்டையின் மூலம் பந்தினை பதம் பார்த்த நிகழ்வுகளும் உண்டு… அவர் ஒய்வு பெற்றாலும் விண்ணை பிளக்கும் ‘சச்சின்’ என்ற அந்த ஒலி அலை மட்டும் ஓயாது. சத்தமில்லாமல் சாதனை சரித்திரங்களை படைத்த சரித்திர நாயகனுக்கு பிறந்த நாள் இன்று… ‘சலாம் சச்சின் பாய்’.

-RJ KANNAN, MADURAI SURYAN FM

About the author

MaNo

Suryan FM Twitter Feed

Suryan Podcast