Specials Stories

2020-ன் சிறந்த 5 திரைப்படங்கள் !!

மற்ற ஆண்டுகளை ஒப்பிடும்போது 2020-ல் வெளியான படங்களின் எண்ணிக்கை சற்று குறைவே என்றாலும், அவற்றுள் பல நல்ல படைப்புகளை நம்மால் காண முடிந்தது. 2020-ல் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்த 5 படங்களை பற்றி இப்பதிவில் காணலாம்.

சூரரை போற்று

சுதா கொங்கரா, பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுத்த படம் தான் சூரரை போற்று. படத்தின் Title-ற்கு ஏற்ப இப்படத்தில் நடித்த அணைத்து நடிப்பு சூரர்களையும் மக்கள் போற்றிய படமாக தான் இப்படம் அமைந்தது. இப்படம் பார்ப்பவர்கள் பலருக்கும் வாழ்க்கையின் பல பாடங்களை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் இப்படத்தின் கதையோட்டத்திற்கு உயிரோட்டம் கொடுக்கும் விதத்தில் இருந்தது. OTT தலத்தில் வெளியானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாக சூரரை போற்று அமைந்தது.

சைக்கோ

மிஷ்கினின் மாறுபட்ட இயக்கத்தில் வித்யாசமான கதைக்களத்துடன் அமைந்த Psychological திரில்லர் திரைப்படம் ” சைக்கோ “. உதயநிதி ஸ்டாலின் இதுவரை இல்லாதது போல, கண் பார்வையற்றவராக இப்படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்றனர். அதிதி ராவ் ஏற்று நடித்த டாகினி கதாபாத்திரம் மக்கள் மனதில் பதியும் அழகிய கதாபாத்திரமாக அமைந்தது. குறிப்பாக அறிமுக வில்லன் ராஜ்குமார் பிச்சுமணி சமீபத்தில் நம்மை மிரட்டிய வில்லன்களுள் முன்னணி இடத்தை பிடிக்கும் வகையில் தன் நடிப்பை  வெளிப்படுத்தியிருப்பார். இந்த ஆண்டின் சிறந்த திரில்லர் படமாக சைக்கோ அமைந்தது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் 

துல்கர் சல்மான், கெளதம் மேனன், ரித்து வர்மா, ரக்ஷன் ஆகியோர் இணைந்து நடித்த கலகலப்பான விறுவிறுப்பான மசாலா திரைப்படம் ” கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் “. அதிக எதிர்பார்ப்பின்றி வெளிவந்து ஆரவாரமாக அமோக வரவேற்பை பெற்ற வெற்றி படமாக இப்படம் அமைந்தது. எதிர்பாராத திருப்புமுனைகளும், வித்யாசமான திரைக்கதையும் தான் இப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டது. இப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை இப்படத்தை இயக்கியதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினியே தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓ மை கடவுளே

புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் இளைஞர்கள் கொண்டாடும் Feel Good படமாக அமைந்தது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். லியோன் ஜேம்ஸ்-ன் இசை இப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய உறுதுணையாக அமைந்தது. இந்த ஆண்டின் சிறந்த படங்களின் பட்டியலை தயார் செய்யும் போது இப்படத்தை நம்மால் தவிர்க்கவே முடியாது. 

தர்பார்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைந்த படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்தார். ரஜினியுடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். Rock Star அனிருத்தின் இசையில் இப்படத்தில் அமைந்த அணைத்து பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வழக்கம் போல் ரஜினியின் பாணியில் Mass Action-ஐ அள்ளித்தெளிக்கும் படமாக தர்பார் அமைந்தது.