நம்ம எல்லோருடைய Life cycleல, ஒரு cycle life story இருந்திருக்கும், எப்போதுமே நம்முடைய வாகனங்கள் நம்மளோட ஒரு உறவா, நம்மளுடைய நிழலா நம்முடைய உற்ற தோழனா இருந்திருக்கு. அதுல சைக்கிள் எல்லோருக்கும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்னு நினைக்கிறேன்.
பல நூற்றாண்டுகளா மனிதனுடைய போக்குவரத்துல சைக்கிள் ஒரு பொழுதுபோக்கான ஒரு போக்குவரத்துன்னு சொல்லலாம், குட்டிக்கரணம் போட்டு, குரங்கு பெடல் அடிச்சு, வாடகை சைக்கிள் வாங்கினு, எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான சைக்கிள் கதை இருக்கும்…!
சைக்கிள் ஓட்டுறதால இருக்கக்கூடிய நன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நம்மளுடைய ஆரோக்கியம், சமூக நன்மைகள் பொருளாதார நன்மைகள்னு எக்கச்சக்கமான விஷயங்கள் சொல்லிட்டே போகலாம். ஆனா இது எல்லாத்தையும் தாண்டி அது நம்ம மனதுக்கு நெருக்கமான ஒரு சந்தோஷம் தரும். அது சைக்கிள் ஓட்டுனவங்களுக்கு மட்டுமே புரியும். இப்ப சைக்கிள் ஓட்டிட்டு இருக்குறவங்களுக்கு ரொம்ப புரியும்…!
2018 ல ஐக்கிய நாடுகளின் பொது சபை ஜூன் 3ஆம் தேதிய உலக சைக்கிள் தினமாக அறிவிக்கிறாங்க, அந்த ஒரு நாள் மட்டும் இல்ல எப்போதும் பயன்படுத்துவோம், பொழுதுபோக்காக மட்டுமல்ல நம்ம சுற்றுச்சூழலையும் நம்ம உடல்நிலையையும் மேம்படுத்துவதற்காக மட்டுமல்ல, உங்க மனதின் நிறைவான சந்தோசத்திற்காக…! உலக சைக்கிள் தின வாழ்த்துக்கள்..!